பேனிக் ஆன பஞ்சாப்.. நள்ளிரவில் நிலநடுக்கம்! அப்படியே அதிர்ந்துடுச்சே - என்ன அளவு?
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் பதிண்டாவில் நள்ளிரவு ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தால் பெரும் பரபரப்பு.
பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் நள்ளிரவு 1.32 மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ரிக்டர் அளவில் 4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் மிதமான அதிர்வுகள் தென்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து இருக்கிறார்கள். பூமிக்கு அடியில் 80 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த மிதமான நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கம் காரணமாக எந்த பாதிப்புகளும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

இது குறித்து தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், "2024 பிப்ரவரி 4 ஆம் தேதி அதிகாலை 1:32:24 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. 30.49 அட்சரேகை மற்றும் 72.14 தீர்க்கரேகையில் 80 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மைம் கொண்டிருந்தது. குறிப்பாக பதிண்டாவிற்கு மேற்கே 271 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்துள்ளது." என தெரிவித்து உள்ளது.
இந்த நிலநடுக்கம் மிதமான அளவில் ஏற்பட்டது என்றாலும், பூமியின் மேற்பகுதியில் ஏற்பட்டு இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். டெக்டோனிக் தட்டு எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் நிலநடுக்கங்கள் அசாதாரணமானவை அல்ல என்றும், இந்த காரணத்தாலேயே பஞ்சாப் போன்ற பகுதிகளில் இதுபோன்ற நில அதிர்வுகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. 80 கிமீ ஆழம் நிலநடுக்கம் என்பது பூமியின் மேற்பகுதியிலேயே வருகிறது. ஆழமான பகுதியில் இந்த அதிர்வுகள் ஏற்படாததால் அதிக பகுதிகளில் அதிர்வுகள் உணரப்படவில்லை.
புவியின் மேற்பரப்பில் உணரப்படும் நிலநடுக்கத்தின் பாதிப்பு தன்மை குறைவாக இருப்பதற்கு இதுவே காரணமாகும். நில நடுக்கத்தின் அளவு மிதமான ஒன்றாக தெரிந்தாலும், அங்குள்ள அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மிதமானதாக தோன்றும் 4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் கூட சில சமயங்களை கடும் அதிர்வுகளை ஏற்படுத்தும். சில சமயங்களில் கட்டிடங்கள் இடிவதற்கும் காரணமாக அமைந்துவிடும்.
நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதிகளில் கட்டிட கட்டமைப்பு நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் இருக்க வேண்டும் என்பது அவசியம். என்சிஎஸ் எனப்படும் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தொடர்ந்து நிலநடுக்கம் தொடர்பாக கண்காணித்து, அபாயங்களை மதிப்பிட்டு பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அத்தியாவசியமான தகவல்களை வழங்கி வருகிறது. இதுபோன்ற நிலநடுக்க பாதிப்புகளுக்கு பிறகு, அங்கு குடியிருப்பவர்கள் அதிகாரப்பூர்வ சமூக தளங்கள், ஊடகங்கள் மூலம் தகவலை பெற்று றும் எந்தவொரு நிலநடுக்கங்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் படி தயாராக இருக்க வேண்டும்.
-
இந்தியாவுக்கு வர வேண்டிய ஈரான் எண்ணெய் கப்பல்.. சீனாவுக்கு திடீர் யூ-டர்ன்.. நடந்தது என்ன? -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்!












Click it and Unblock the Notifications