'மாபெரும் வெற்றி பேரணி..' ஓராண்டிற்கு பின் வீடு திரும்பும் விவசாயிகள்.. முடிவுக்கு வரும் போராட்டம்
சண்டிகர்: மத்திய அரசு விவசாய சட்டங்களை ரத்து செய்துள்ள நிலையில், சுமார் ஒரு ஆண்டிற்கும் மேலாகத் தொடர்ந்த விவசாயிகள் போராட்டம் இன்று வெற்றி பேரணியுடன் முடிவுக்கு வருகிறது.
மத்திய அரசு கடந்த ஆண்டு புதிதாக விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தது. இதை எதிர்த்து முதல் சில மாதங்கள் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் போராட்டங்களைத் தொடங்கிய விவசாயிகள், பின்னர் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டனர்.
அங்குத் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் ஓர் ஆண்டாகத் தொடர்ந்தது. முதலில் விவசாய சட்டங்களை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றே மத்திய அரசு தொடர்ந்து கூறி வந்தது.

விவசாயிகள் போராட்டம்
இருப்பினும், விவசாயிகள் உறுதியாக தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதன் பயனாக மத்திய அரசு கடந்த மாதம் விவசாய சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தது. இருப்பினும், விவசாயிகள் இது குறித்து நாடாளுமன்றத்தில் முறையாகச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியது. குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் விவசாய சட்டங்கள் ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

முடிவுக்கு வரும் போராட்டம்
அதேபோல வழக்குகளை ரத்து செய்வது குறித்தும் மத்திய அரசு உறுதி அளித்தது. இந்தச் சூழலில் தான் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை இன்றுடன் முடித்துக் கொள்கின்றனர். போராட்டத்தின் சமயத்தில் டெல்லி எல்லையில் அமைக்கப்பட்ட தற்காலிக தங்குமிடங்களை விவசாயிகள் அகற்றி வருகின்றனர். இன்று சில வெற்றி நிகழ்வுகளில் பங்கேற்ற பிறகு, விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ளவுள்ளனர்.

டிராக்டர் பேரணி
விவசாயிகள் டிராக்டர்களில் தங்கள் வீடுகளுக்குத் திரும்புகையில் அவர்களை வரவேற்க நெடுஞ்சாலைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வெற்றி பேரணி நேற்று நடத்தத் திட்டமிடப்பட்டது. இருப்பினும், முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் உட்பட 13 பேரின் மரணத்தைத் தொடர்ந்து அது ஒத்திவைக்கப்பட்டது.

ராகேஷ் டிக்கைட்
இது தொடர்பாக விவசாய சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிக்கைட் கூறுகையில், "போராட்டத்தின் சமயத்தில் எங்களுக்கு உதவியாக இருந்தவர்களை நாங்கள் நேரில் சந்தித்துப் பேசுவோம். விவசாயிகள் ஏற்கனவே வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கிவிட்டனர். இன்று பெரும்பாலான விவசாயிகள் வீடு திரும்பி விடுவார்கள். விவசாயிகள் முழுமையாக டெல்லி எல்லையில் இருந்து வீடுகளுக்குத் திரும்ப 4-5 நாட்கள் வரை ஆகும்" என்று அவர் தெரிவித்தார்,

மத்திய அரசு ஒப்புதல்
விவசாயிகள் முன் வைத்த மற்றொரு முக்கிய கோரிக்கை குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பானது. இந்த பிரச்சினை தொடர்பாக முடிவு செய்ய ஒரு குழுவை அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த குழுவில் அரசு அதிகாரிகள், விவசாய வல்லுநர்கள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள். அதேபோல போராட்டத்தின் போது உயிரிழந்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், பஞ்சாப் அரசு ஏற்கனவே இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அடுத்துத் தேர்தல்
அடுத்தாண்டு தொடக்கத்தில் பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் சட்டசபை நடைபெறும் நிலையில், விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது மத்திய அரசுக்கு மிகப் பெரிய நிம்மதியைக் கொடுக்கிறது. விவசாயிகள் போராட்டம் முழுமையாக முடிவுக்கு வந்துள்ள நிலையில் இனி சட்டசபைத் தேர்தல்களில் பாஜக முழுமையாகக் கவனம் செலுத்தலாம். இந்த விவசாயிகள் போராட்டம் தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அடுத்தாண்டு தான் தெரிய வரும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications