“இன்டெர்வியூ” வாங்க.. அலறிய குருகிராம்! மாலில் பொறியாளர் பலாத்காரம் - துஷார் சர்மாவை தேடும் போலீஸ்
குருகிராமில் பெண் பொறியாளரை நேர்காணலுக்கு அழைத்து அவரை மால் பார்க்கிங்கில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சண்டிகர்: குருகிராமில் பெண் பொறியாளர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு அவருக்கு குடிநீரில் போதை மருந்து கலந்துகொடுத்து மால் பார்க்கிங்கில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தலைநகர் டெல்லி அருகே அமைந்து இருக்கும் குருகிராம் பகுதி அரியானா மாநில எல்லைக்குள் வருகிறது. ஏராளமான ஐடி நிறுவனங்களை கொண்டு இருக்கும் இந்த நகரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கி இருந்து ஐடி உள்ளிட்ட பல துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இப்பகுதியை சேர்ந்த 27 வயது பெண் பொறியாளர் ஆன்லைனில் வேலைக்காக விண்ணப்பித்து இருக்கிறார். அப்போது அதில் இருந்த துஷார் சர்மா என்பவரது எண்ணுக்கு அந்த பெண் தொடர்பு கொண்டு உள்ளார். அவரிடம் பேசிய துஷார் சர்மா உறுதியாக வேலை கிடைக்கும் என்று கூறி இருக்கிறார்.

மாலில் பலாத்காரம்
அதற்கு முன்பாக சஹாரா மாலில் சனிக்கிழமை அன்று நேர்காணல் நடைபெறும் என்றும், அதில் அவர் கலந்துகொள்ள வேண்டும் என்று துஷார் சர்மா கூறி இருக்கிறார். அந்த பெண்ணும் இதை நம்பி சஹாரா மாலுக்கு சென்று துஷார் சர்மாவை சந்தித்து உள்ளார். அப்போது மால் பார்க்கிங்கிற்கு அழைத்து சென்ற துஷார் சர்மா, போதை மருந்து கலந்த தண்ணீரை கொடுத்து பெண் மயங்கியதும் காரில் வைத்து பலாத்காரம் செய்து இருக்கிறார்.

போலீசில் பெண் புகார்
அதன் பின்னர் பெண்ணை காரிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து துஷார் சர்மா தப்பிச்செல்லவே, பாதிக்கப்பட்ட பெண் சுயநினைவுக்கு திரும்பியவுடன் தனக்கு நேர்ந்த கொடுமையை உணர்ந்து அதிர்ச்சியடைந்து இருக்கிறார். வேலை தருவதாக கூறி தன்னை பலாத்காரம் செய்த துஷார் சர்மா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செக்டார் 51 மகளிர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

நேர்காணலுக்கு அழைப்பு
அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, "துஷார் சர்மாவுடன் தொலைபேசியில் பேசிய பிறகு மதியம் ஒரு மணியளவில் நான் என்னுடைய ஆவணங்களை எடுத்துக்கொண்டு நேர்காணலுக்காக மாலுக்கு சென்றேன். மாலின் வாசலிலேயே துஷார் சர்மா என்னை பார்த்தார். அவர் என்னை மாலின் அடித்தளத்தில் உள்ள பார்க்கிங்கிற்கு அழைத்து சென்றார்.

தண்ணீரில் போதை மருந்து
அங்கு அவர் எனக்கு தண்ணீர் கொடுத்தார். அதில் போதை மருந்து கலந்திருந்தது. உடனே நான் சுயநினைவை இழந்தேன். அதன் பின்னர் அவர் என்னை காருக்குள் தள்ளி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார். அதன் பின்னர் அவர் என்னை தனியாக விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

போலீஸ் விசாரணை
இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்வேன் என்று மிரட்டினார்." என்று குறிப்பிட்டார். பெண்ணின் புகாரை தொடர்ந்து அவரை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி சுமன் சுரா தெரிவிக்கையில், சிசிடிவி காட்சிகளை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் எனவும் தெரிவித்தார். அவர் மீது விஷம் கொடுத்தல், பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications