நிலத்தில் வைரக்கல் போல மின்னுதே.. கிட்ட பார்த்த பெண் விவசாயி.. ஆஹா அதிர்ஷ்டம்! ஆச்சரியத்தில் ஆந்திரா

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: அதிர்ஷ்டம் என்பது அனைவருக்குமே அமைந்துவிடுவதில்லை.. என்றாவது ஒரு நாள் அதிர்ஷ்ட காற்று வீசும் என்ற நம்பிக்கையில் லாட்டரி டிக்கெட்டை தொடர்ந்து பலரும் வாங்கி கொண்டிருக்கிறார்கள்.. ஆனாலும், ஒருசிலருக்கே அதிர்ஷ்டம் அடிக்கிறது.. லாட்டரிகளில்தான் திடீர் பணக்காரர்கள் முளைப்பார்கள்.. ஆனால், லாட்டரி இல்லாமலேயே ஒருவர் ஓவர்நைட்டில் பணக்காரராகியிருக்கிறார். ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் பெண் விவசாயிக்கு நடந்த சம்பவம் பேசுபொருளாகிவருகிறது.

கடந்த மாதம், பஞ்சாப் மாநிலத்தில் மோகா மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளி ஜாஸ்மயில் சிங் என்பவர், லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கத்தை கொண்டவர்.. அங்குள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வருகிறார்.

Andhra pradesh Female farmer diamond

லாட்டரி டிக்கெட் - அதிர்ஷ்டசாலி

கூலித் தொழிலாளியான இவர் பெரோஷ்பூருக்கு சென்றபோது, ரூ.6க்கு லாட்டரி டிக்கெட் வாங்கியிருக்கிறார்.. மறுநாள் அந்த டிக்கெட்டுக்கு 1 கோடி விழுந்துள்ளது.. இதைக்கேட்டு இன்ப அதிர்ச்சியடைந்த ஜாஸ்மயில், இசை வாத்தியங்களுடன் அவரது குடும்பத்தினருடன் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.. கிலோ கணக்கில் ஸ்வீட்களை வாங்கி அந்த ஊர் மக்களுக்கெல்லாம் தந்தார்..

பஞ்சாப் மாநிலத்தில் ரூ.6க்கு லாட்டரி வாங்கிய கூலித் தொழிலாளிக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ள சம்பவம் இணையத்திலும் பேசுபொருளானது..

ஆனால், இந்த ஆந்திர மாநிலம் அப்படியில்லை.. கர்நூல் மாவட்டம் துக்கலி அடுத்த ஜிகவா சிந்தில் கொண்டா பகுதியில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வந்தது.. பல மாதங்களாகவே மழை இல்லாததால், சோகத்திலிருந்த விவசாயிகளுக்கு இந்த மழை, பெருத்த மகிழ்ச்சியை தந்துவிட்டு போனது..

விவசாய நிலத்தில் மின்னிய வைரம்

இதையடுத்து, அந்த கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயி ஒருவர், தன்னுடைய நிலத்தை உழுது கொண்டு இருந்தார். அப்போது மண்ணில் ஏதோ திடீரென மின்னுவதை கண்டார்.. உடனே அதை கையில் எடுத்து பார்த்தபோதுதான், அது வைரம் என்பது தெரியவந்து, திக்குமுக்காடிப்போனார்.. விவசாய நிலத்தில் பெண்ணுக்கு வைரம் கிடைத்த தகவல் அந்த பகுதி முழுக்க தீயாய் பரவியது.

உடனே விவசாயிகள் அந்த வைரக்கல்லை விலைக்கு வாங்குவது என முடிவெடுத்தனர்.. இதனால் தங்களிடமிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு, அந்த கிராமத்தில் குவிந்துவிட்டனர்.

சொந்த நிலத்தில் வைரம் கிடைத்ததால், தன்னிடமிருந்த அந்த வைரக்கல்லுக்கு ரூ. 18 லட்சம் என்று விலையை நிர்ணயித்தார் பெண் விவசாயி.. இதனால், வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து ரூ. 8 லட்சத்துக்கு வைரக்கல்லை வாங்க பேரம் பேசினார்கள்.. இறுதியில், சென்னம்பள்ளியை சேர்ந்த வைர வியாபாரி, ரூ.13.50 லட்சத்திற்கு அந்த வைரக்கல்லை விலைக்கு வாங்கினார்.. இதனால் ஒரே நாளில் 13.50 லட்சத்தை அள்ளினார் பெண் விவசாயி..

ஜொலித்த வைரம் - கோடீஸ்வரர்

ஆனால், கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜோனகிரி, எர்ரகுடி, உப்பர்லபள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மழை காலங்களில் விலை மதிப்புள்ள வைரங்கள் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

இப்படித்தான், கடந்த 2019-ல் விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்தில் கிடைத்த ரூ.60 லட்சம் மதிப்பிலான வைரத்தை உள்ளூர் வணிகரிடம் நல்ல தொகைக்கு விற்பனை செய்திருந்தார். 2 வருடங்களுக்கு முன்புகூட, இதே கர்னூல் மாவட்ட விவசாயிகள் 2 விலை உயர்ந்த வைரக் கற்களை கண்டுபிடித்து நல்ல தொகைக்கு விற்றார்களாம்.

30 கேரட் வைரம் ஒருவருக்கு கிடைத்து, அனந்தபூர் மாவட்டத்திலுள்ள வைர வியாபாரியிடம் ரூ.2 கோடிக்கு விற்று ஓவர்நைட்டில் விற்று கோடீஸ்வரரானார்.

வானத்திலிருந்து வைரக்கல்

ஆனால், ஒருமுறை, வானத்திலிருந்து வைரக்கற்கள் விழுவதாக, கர்னூல் மாவட்ட விவசாயிகளிடம் வதந்தி ஒன்று பரவிவிட்டது.. இதனால், வைரம் கிடைக்கும் என்ற ஆசையால் விவசாயிகள் அவரவர் நிலத்தில் தஞ்சம் அடைந்துவிட்டார்கள்..

வீட்டு வேலைகளைகூட செய்யாமல், இரவும் பகலும், குடும்பத்தினருடன் வயல்வெளிகளிலேயே காத்து கிடந்தனர்.. இதற்காகவே தற்காலிக கூடாரங்களையும் அமைத்துக் கொண்டு விடிய விடிய வானத்தையே பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்தனர்.. ஆனால், சில நாட்கள் கழித்து, அத்தனையும் வதந்தி என்று தெரிந்தபிறகுதான், அவரவர் வீட்டுக்கு கிளம்பி சென்றது, நினைவிருக்கலாம்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+