ஹரியானா தேர்தல்: முதல் கட்டமாக 67 வேட்பாளர்களை அறிவித்த பாஜக! முதல்வர் நயாப் சிங் லட்வாவில் போட்டி!
சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் 67 வேட்பாளர்கள் முதல் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, லட்வா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் வேட்பாளர்கள் அறிவிப்பில் பாஜக மிக மோசமான தடுமாற்றத்தை வெளிப்படுத்தி, எதிர்ப்பை எதிர்கொண்ட நிலையில் ஹரியானா வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தின் 90 சட்டசபை தொகுதிகளுக்கும் முதல் கட்டமாக அக்டோபர் 5-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். அன்று பதிவாகும் அனைத்து வாக்குகளும் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஹரியானா சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) தொடங்குகிறது. இம்மாநிலத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 12. இறுதி வேட்பாளர் பட்டியல் செப்டம்பர் 16-ந் தேதி வெளியாகும். ஹரியானாவில் அக்டோபர் 1-ந் தேதிதான் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் முன்னர் அறிவித்தது. ஆனால் பாஜக உள்ளிட்ட கட்சிகளின் நெருக்கடியால் தேர்தல் தேதியை மாற்றி அறிவித்தது இந்தியத் தேர்தல் ஆணையம்.
ஹரியானாவில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. பாஜகவுக்கு எதிரான அதிருப்தி அலையை அறுவடை செய்வதில் காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது. இதனால் எதிர்க்கட்சிகளான ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ஜேஜேபி உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய மெகா கூட்டணியை உருவாக்குவதில் காங்கிரஸ் மும்முரமாக உள்ளது.
இந்த நிலையில் ஹரியானாவில் 67 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று அறிவித்தது. முதல்வர் நயாப் சிங் சைனி, லட்வா தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் வினோத் சர்மாவின் மனைவி ராணி சர்மா, கல்கா தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவை உலுக்கிய ஜெசிகா லால் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மனு சர்மாவின் தாயார்தான் இந்த ராணி சர்மா. தோஷம் தொகுதியில் ஸ்ருதி சவுத்ரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் ராஜ்யசபா எம்பியும் ஜூன் மாதம் பாஜகவில் இணைந்தவருமான கிரன் சவுத்ரியில் மகள்தான் ஸ்ருதி சவுத்ரி. இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன் தீபக் ஹூடாவையும் பாஜக வேட்பாளராக நிறுத்தி உள்ளது.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்து பாஜக பெரும் எதிர்ப்பை சந்தித்தது. ஜம்முவில் பாஜக தலைமை அலுவலகத்தை நாள்தோறும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் முற்றுகையிட்டு கண்டனப் போராட்டம் நடத்தி நெருக்கடி கொடுத்திருந்தனர். இந்த நிலையில் ஹரியானா பாஜக வேட்பாளர் பட்டியல் எந்த பிரளயத்தை ஏற்படுத்துமோ? என்கிற பீதியில் இருக்கிறதாம் டெல்லி மேலிடம்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications