அரியணை ஏறுது காங்கிரஸ்! ஹரியானாவில் பாஜக "கிளீன் போல்ட்" .. ரீபப்ளிக் -மெட்ரைஸ் எக்சிட் போல் கணிப்பு
சண்டிகர்: ஹரியானா எக்ஸிட் போல் வெளியாகி வரும் நிலையில், அங்கே காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்து உள்ளன. பாஜக படு தோல்வி அடையும், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்று ரீபப்ளிக் -மெட்ரைஸ் எக்சிட் போல் கணிப்பு வெளியிட்டு உள்ளது.
ரீபப்ளிக் -மெட்ரைஸ் கருத்துக்கணிப்பு: காங்கிரஸ் 55-62 இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறதுரிபப்ளிக்-மேட்ரைஸ் கருத்துக்கணிப்பின்படி, பாஜக 30.30% வாக்குகளுடன் 18-24 வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 35.80% வாக்குகளுடன் 55-62 வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. JJP+ 0-3 இடங்களை 6.60% வாக்குகளுடன் பெறும் வாய்ப்புகள் உள்ளன.

பாஜக 18-24; 30.30%
INC 55-62; 35.80%
JJP+ 0-3; 6.60%
INLD+ 3-6; 12.10%
இந்தியன் 2-5; 15.20%
ஹரியானாவில் இருக்கும் 90 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. வருகிற 8ம் தேதி அங்கே வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
தேர்தல் முடிவுகள்: ஹரியானாவில் இருக்கும் 90 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. வருகிற 8ம் தேதி அங்கே வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அங்கே கட்சிகள் போட்டியிட்ட இடங்கள்
பாஜக - 89 இடங்களில் போட்டி
இந்தியா கூட்டணி - காங்கிரஸ் 89 இடங்களில் போட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடத்தில் போட்டி
ஜேஜேபி - ஏஎஸ்பி(கேஆர்) கூட்டணி: ஜனநாயக ஜனதா கட்சி 66 இடங்களில் போட்டி, ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) 12 இடங்களில் போட்டி
ஆம் ஆத்மி - 88 இடங்களில் போட்டி
ஹரியானா தேர்தலில் 101 பெண்கள் மற்றும் 464 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 1,031 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
கிட்டத்தட்ட 68 சதவிகித வாக்குகள் வரை இந்த தேர்தலில் பதிவாகி உள்ளன.
முந்தைய தேர்தல்; கடந்த 2019 தேர்தலுக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜனநாயக் ஜனதா கட்சியின் கூட்டணி அமைத்து மாநில அரசாங்கத்தை அமைத்தது, அப்போது மனோகர் லால் கட்டார் முதலமைச்சரானார். இதில் மெஜரிட்டி பெற 46 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தள் மற்றும் ஹரியானா லோக்கித்ட் கட்சி தலா ஒரு இடங்களில் வென்றிருந்தது. அதேபோல, சுயேட்சை வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் வென்றிருக்கின்றனர்.
பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மையாக மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து பாஜக ஆட்சியை பிடித்தது. இதற்காக கூட்டணி கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதலமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஜனநாயக ஜனதா கட்சி தனது ஆதரவை விலக்கிக்கொண்டிருக்கிறது. எனவே முதலமைச்சர் கட்டார் உட்பட அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்தார்.
இதையடுத்து நயாப் சிங் சைனி பாஜக சார்பாக சுயேட்சைகள் உதவியுடன் முதல்வரானார். ஆனால் கடந்த மே மாதம் 3 சுயேச்சை இவருக்கான ஆதரவை வாபஸ் வாங்கிய நிலையில், அங்கே பாஜக மைனாரிட்டி ஆட்சி நடத்தி வந்தது.












Click it and Unblock the Notifications