காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. ஹரியானாவில் வெல்ல வாய்ப்பு பிரகாசம்! ஆனாலும் வெடித்த குழப்பம்
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் மிக விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு இப்போது காங்கிரஸ் வென்று ஆட்சியை அமைக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. ஆனால், காங்கிரஸில் திடீரென வெடித்துள்ள உட்கட்சி குழப்பம் வெற்றி வாய்ப்பை பாதிப்பதாக இருக்கிறது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள பாஜகவும் முயல்கிறது.
ஹரியானாவில் வரும் அக். 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அங்கு இப்போது பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

ஹரியானா காங்கிரஸ்: ஹரியானா மாநிலத்தை பொறுத்தவரை அங்கு காங்கிரஸ் கட்சி பூபிந்தர் சிங் ஹூடா தலைமையில் தான் தேர்தலை எதிர்கொள்கிறது. ஹரியானா காங்கிரஸின் மூத்த அரசியல்வாதியான இவர், 1972 முதலே காங்கிரஸில் தான் இருக்கிறார். மேலும், 2005 முதல் 2014 வரை சுமார் 10 ஆண்டுகள் முதல்வராகவும் இருந்துள்ளார்.
அதேநேரம் இந்த முறை வென்றால் ஹரியானா முதல்வராக பூபிந்தர் சிங் ஹூடா தான் வருவார் என சொல்ல முடியாது. ஏனென்றால், அங்கு காங்கிரஸில் இப்போது குமாரி செல்ஜாவுக்கும் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. அங்கு பிரச்சாரம் தொடங்கும் முன்பே, பூபிந்தர் சிங் ஹூடாவுக்கும், குமாரி செல்ஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தது வெளிப்படையாகத் தெரிந்தன. தேர்தல் நெருங்க நெருங்க அது வெளிப்படையாகவே தெரிகறது.
யார் இந்த குமார் செல்ஜா: குமாரி செல்ஜா தலித் தலைவர். ஹரியானாவில் மொத்தமுள்ள 90 இடங்களில் 17 இடங்கள் எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த முறை ஹரியானாவில் பாஜக மீது நம்பிக்கை இழந்துள்ள தலித் மக்கள் மெல்ல காங்கிரஸ் நோக்கி வருகிறார்கள். இந்த நேரத்தில் குமாரி செல்ஜாவின் வாய்ஸ் காங்கிரஸ் கட்சிக்கு ரொம்பவே முக்கியமானதாக இருக்கிறது.
ஆனால், உட்கட்சி பூசல் தலைவலியாக மாறியுள்ளது. இந்தச் சூழலை பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்த பார்க்கிறது. காங்கிரஸின் உட்கட்சி மோதலை சுட்டிக்காட்டிய ஹரியானாவின் மூத்த பாஜக தலைவரும் மத்திய பாஜக அமைச்சருமான மனோகர் லால் கட்டார், குமாரி செல்ஜா பாஜகவில் இணைய வேண்டும் என வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தார்.
தட்டி தூக்கும் பாஜக: மனோஹர் லால் கட்டார் கூறுகையில், "ஹரியானா காங்கிரஸில் நிறைய உட்கட்சி பூசல்கள் உள்ளன. யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் தெளிவு இல்லை. தந்தைக்கும் மகனுக்கும் (பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் தீபேந்தர் ஹூடா) இடையே சண்டை உள்ளது. வேறு சிலரும் காத்திருக்கிறார்கள். ஆனால், எங்கள் தலித் சகோதரிக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதனால் ஹரியானாவின் பெரும் பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர். அவர் இங்கு வந்தால், அவருக்கு வாய்ப்பு வழங்க தயாராக இருக்கிறோம்" என்றார்.
இது தொடர்பாக குமாரி செல்ஜாவிடம் கேட்ட போது அதை அவர் மறுக்கவில்லை என்பதே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. உலகில் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என மட்டும் சொல்லிவிட்டு சென்றார். ஹரியானா தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்கு போதியளவு சீட் கிடைக்கவில்லை என குமாரி செல்ஜா கருதுகிறார். மொத்தமுள்ள 90 இடங்களில் 13 சீட்கள் மட்டுமே குமாரி செல்ஜா ஆதரவாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிருப்தி: வேட்பாளர் தேர்வு சமயத்திலேயே குமாரி செல்ஜா தனது ஆதரவாளர்களுக்கு 30 முதல் 35 சீட் வரை தேவை என வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவருக்கு கிடைத்தது வெறும் 13 சீட்கள் தான். மற்ற சீட்கள் எல்லாம் ஹூடா தரப்புக்கு ஒதுக்கப்பட்டதால் குமாரி செல்ஜா அதிருப்தியில் இருக்கிறாராம். இதனால் ஹரியானாவில் காங்கிரஸில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க டெல்லி தலைமை இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துகிறதாம்.
சமீபத்தில் கூட காங்கிரஸின் மூத்த தலைவர் ப. சிதம்பரம், இரு தரப்பிற்கும் இடையே மோதல் எதுவும் இல்லை என கூறியிருந்தார். இரு தரப்பும் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் தேர்தலில் வெற்றி பெறுவதே முதன்மை இலக்கு என்றும் ப. சிதம்பரம் கூறினார்.
அடுத்து என்ன: அதேநேரம் அங்கு உட்கட்சி மோதல் ஓய்வதாக தெரியவில்லை. ஹரியானாவில் வரும் அக. 5ம் தேதி தேர்தல் நடக்கும் நிலையில், அதற்குள் எந்தவொரு குழப்பமும் வரக்கூடாது என்றே காங்கிரஸ் தலைமை விரும்புகிறது. பல்வேறு காரணங்களால் அங்கு காங்கிரஸ் மிக எளிமையாக வெல்லும் சூழல் உருவாகியுள்ள நிலையில், அதை உட்கட்சி மோதலே கெடுக்க இருப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
-
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!












Click it and Unblock the Notifications