சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓரம்கட்டிய போலீஸ்.. காரை நிறுத்தாமல் வேகமாக மோதிய டிரைவர்.. அடுத்து நடந்த சுவாரசியம் - வீடியோ!

ஹரியானாவில் டிராபிக் போலீஸ் மீது இளைஞர் ஒருவர் காரை ஏற்றிவிட்டு வேகமாக ஓட்டி சென்ற சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    டிராபிக் போலீஸ் மீது காரை ஏற்றி அலேக்காக தூக்கிச்சென்ற இளைஞர்-வீடியோ

    சண்டிகர்: ஹரியானாவில் டிராபிக் போலீஸ் மீது இளைஞர் ஒருவர் காரை ஏற்றிவிட்டு வேகமாக ஓட்டி சென்ற சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.

    ஹரியானாவின் குர்கான் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பொதுவாகவே ஹரியானாவின் குர்கான் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசலை சந்திக்க கூடிய நகரம்.

    மாலை நேரங்களில் அங்கு போக்குவரத்து போலீசார் எப்போதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    நிறுத்தவில்லை

    நிறுத்தவில்லை

    இந்த நிலையில் குர்கானில் சிக்னேச்சர் டவர் அருகே உள்ள சாலையில் நேற்று டிராபிக் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக ஒன்-வேயில் கார் ஒன்று வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அந்த காரை நிறுத்த முயற்சி செய்துள்ளனர்.

    மோதி திருப்பியது

    மோதி திருப்பியது

    ஆனால் அந்த கார் நிற்கவில்லை. அங்கிருந்து போலீஸ் ஒருவர் மீது அந்த கார் ஓட்டுநர் வேகமாக மோதிவிட்டு காரை யூ டர்ன் எடுத்தார். ஆனால் அந்த போலீஸ் கொஞ்சம் கூட அசராமல் காரை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.

    நீண்ட தூரம் சென்றார்

    அந்த காரிலேயே தொங்கி கொண்டு போலீசார் சில நூறு மீட்டர்கள் வேகமாக சென்றார். போலீஸ் தனது காரில் தொங்கி இருந்த போதும் கூட அந்த கார் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சென்றார். அதன்பின் சிறிது தூரம் சென்ற பின் கார் ஓட்டுநர் காரை ஓரம்கட்டினார்.

    கைது செய்யப்பட்டார்

    கைது செய்யப்பட்டார்

    அதன்பின் அந்த டிரைவர் கைது செய்யப்பட்டார். அவரின் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அவரிடம் சரியான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதால் இப்படி வேகமாக தப்பிக்க முயற்சி செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது.

    English summary
    Haryana man tries to drive away with Traffic Cop on bonnet: See What happens next - video.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X