ஹரியானாவில் ஆட்டத்தை மாற்றிய "ஜாட்" வாக்குகள்.. பாஜகவை துடைத்தெறிய காரணமே இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் இப்போது வெளியாக ஆரம்பித்துள்ளது. இதில் முதற்கட்ட தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது காங்கிரஸ் ஆட்சியை அமைக்கவே வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது. ஹரியானாவில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியை அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு ஜாட் மக்களின் வாக்குகள் முக்கிய காரணமாகும்.

ஹரியானாவில் மொத்தம் 90 சீட்கள் உள்ள நிலையில், அங்கு எல்லா தொகுதிகளுக்கும் கடந்த சனிக்கிழமை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. மக்கள் பெரியளவில் ஆர்வமாக வாக்களிக்கவே வந்தனர்.

haryana assembly election results 2024 2024 haryana assembly election 2024 haryana election 2024 2024


ஹரியானா தேர்தல்: இதற்கிடையே இப்போது அங்குத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. இதில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே இப்போது முன்னிலையில் உள்ளன. இதே டிரெண்ட் தொடர்ந்தால் நிச்சயம் காங்கிரஸ் கட்சியை ஆட்சியைப் பிடிக்கும். அதாவது சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியை ஆட்சியைப் பிடிக்கும்.

காங்கிரஸ் கட்சி அங்கு வெல்ல முக்கியமான ஜாட் மக்களின் வாக்குகளே முக்கிய காரணமாகும். ஜாட் மக்கள் பாஜக மீது கடும் கோபத்தில் இருந்தனர். விவசாயிகள் போராட்டத்தில் பெருமளவு ஜாட் விவசாயிகளே ஈடுபட்ட நிலையில், அதை பாஜக கையாண்ட விதம் ஜாட் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கோபம்: 3 விவசாய சட்டங்களும் வாபஸ் பெறப்பட்ட போதிலும், அந்த நேரத்தில் ஹரியானா பாஜக அரசும் சரி, மத்திய பாஜக அரசும் சரி போராட்டத்தைக் கையாண்ட விதத்தை அவர்கள் மறக்கவில்லை. மேலும், அப்போது பாஜக தலைவர்கள் சொன்ன சில கருத்துகளும் கொந்தளிப்பையே ஏற்படுத்தியிருந்தது. சமீபத்தில் கூட கங்கனா இது குறித்து சர்ச்சை கருத்துகளையே கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது. ஜாட் மக்கள் இதனால் பாஜக மீது கடும் கோபத்தில் இருந்தனர்.

ஜாட் மக்கள்: ஹரியானா மாநிலத்தைப் பொறுத்தவரை ஜாட் மக்கள் எப்போதும் பாஜக ஆதரவாக இருந்ததே இல்லை. அவர்கள் எப்போதும் காங்கிரஸ் நிலைப்பாட்டிலேயே இருப்பார்கள். கடந்த 2 தேர்தல்களில் ஜாட் மக்கள் வாக்குகள் ஜேஜேபி மற்றும் ஐஎன்எல்டி கட்சிகளுக்குச் சென்றது. ஆனால், இந்த முறை பாஜக மீதான கோபத்தால் ஜாட் மக்கள் வாக்குகள் அப்படியே காங்கிரஸ் கட்சிக்கு வந்துள்ளது.

ஹரியானாவில் ஜாட் பெரும்பான்மை உள்ள தொகுதிகள் மொத்தம் 36 இருக்கிறது. அதாவது இந்த தொகுதிகளில் ஜாட் மக்கள்தொகை சுமார் 30%க்கு மேல் உள்ளது. அதில் தற்போது வரை வெளியான தேர்தல் முடிவுகளில் சுமார் 20+ தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் இருக்கிறது. ஜாட் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாக்களிக்கத் தொடங்கியது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+