அன்று மணிப்பூர்.. இன்று பஞ்சாப்.. "அந்த" கோலத்தில் 55 வயது பெண்ணை.. இன்னுமா அக்கிரமம் நம்ம நாட்டில்?
சண்டிகர்: இன்னும் மணிப்பூரில் நடந்த அக்கிரமத்துக்கே விடையும், விடிவும் கிடைக்காத நிலையில், இன்னொரு கொடுமை பஞ்சாப்பில் அரங்கேறியிருக்கிறது.. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெருத்த அதிர்ச்சியையும் தந்து வருகிறது.
பஞ்சாப் மாநிலம், தர்ன் தாரன் மாவட்டத்தில் வால்டோஹா என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வருகிறார் அந்த பெண்மணி.. 55 வயதாகிறது.. இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

காதல்: இந்த மகன், பக்கத்துவீட்டு பெண்ணை காதலித்துள்ளார்.. அந்த பெண்ணும் இவரை உயிருக்கு உயிராக விரும்பினார்.. இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது.. அவர்களது வீட்டில் எதிர்ப்பும் வலுத்துள்ளது. இதனால், காதலர்கள் 2 பேருமே வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டார்கள். இது அந்த கிராமத்தில் பெருத்த பிரச்சனையாக வெடித்தது.
தங்கள் மகளை, இழுத்துக் கொண்டு போன இளைஞரின் 55 வயது தாய் மீது ஆத்திரம் திரும்பியது.. இது தொடர்பான விரோதத்தில் சிலர் திரண்டு வந்து, அந்த தாயை, கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்...
கொடுமை: அந்த பெண்ணின் வயதைகூட கருதாமல், அரை நிர்வாணப்படுத்தி, கிராமத்துக்கு அழைத்து வந்து, அவமானப்படுத்தியிருக்கிறார்கள். இந்த கொடுமையை அந்த கிராமத்தில் உள்ளவர்களால் தடுக்க முடியவில்லை. அதேசமய்ம, அனை வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர்.. நேற்றிலிருந்து இந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி பொதுமக்களுக்கு கடுமையான அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, தர்ன் தரன் மாவட்ட போலீஸார், மொத்தம் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.. இதில், குல்விந்தர் கவுர் மணி, சரண்ஜித் சிங் ஷானி, குர்சரண் சிங் ஆகிய 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர.. மற்ற குற்றவாளிகள் தலைமறைவாகி இருப்பதால், அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அதிர்ச்சி: கடந்த 3ம் தேதி இந்த வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.. அப்படியானால், சம்பவம் அதற்கும் முன்பே நடந்துள்ளதாக தெரிகிறது.. ஏற்கெனவே மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து வந்த சம்பவம் இந்த தேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மணிப்பூர் அன்று பற்றி எரிந்தபோது, அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும், பிரபலங்களும் கண்டனங்களை கொட்டி தீர்த்தனர்.
மணிப்பூர் போன்ற சம்பவங்கள் இனியும் இங்கு நிழ்ந்துவிடக்கூடாது என்றே மத்திய, மாநில அரசுகள் இதுபோன்ற குற்ற வழக்குகளில் கடுமையை காட்டி வருகின்றன. எனினும், பஞ்சாப்பில் மறுபடியும் ஒரு கொடுமை நடந்துள்ளது, அளவுகடந்த அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
நிஜ விடுதலை: "அவமான சின்னங்களாக" பெண்களின் உடலை உருவாக்கி வைத்திருப்பது இந்த சமூகம்தான். இதுபோன்ற பார்வை எப்போது கலைகிறதோ அப்போதுதான், இந்த தேசத்தின் பெண்களுக்கு நிஜமான விடுதலை போலும்..!!!












Click it and Unblock the Notifications