Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிகாலை ஆபரேஷன்! பின்லேடனை பிடித்த அதே ஸ்டைலில் "தூக்கப்பட்ட" அம்ரித்பால்! கண்காணித்த சிஎம்! பின்னணி

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பாகிஸ்தானில் பதுங்கி இருந்த ஒசாமா பின்லேடனை கண்டுபிடித்தது போலவே காலிஸ்தானி பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கையும் போலீசார் திறமையாக செயல்பட்டு கண்டுபிடித்து உள்ளனர்.

பாகிஸ்தானில் அபோதாபாத் என்ற இடத்தில் தலைமறைவாக இருந்த தீவிரவாதி ஒசாமா பின்லேடன் கடந்த 2011ம் ஆண்டு மே 2ம் தேதி கொல்லப்பட்டார். அமெரிக்கா ராணுவம் இரவோடு இரவாக அவரின் வீட்டிற்குள் புகுந்து அவரை சுட்டுக்கொன்றது.

How did Amritpal Singh surrender to the police and Why it connected with Osama Bin Laden operation?

அது நாள் பின்லேடன் எங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் உலக நாடுகளை ஏமாற்றி வந்தது. பாகிஸ்தானுக்கே தெரியாமல் அமெரிக்கா தனது படைகளை உள்ளே அனுப்பி இந்த தாக்குதலை நடத்தியது.

அதிகாலை அவர் இருக்கும் வீட்டின் மாடியின் மீது ஹெலிகாப்டர் மூலம் புகுந்து.. பின்னர் அவர் இருக்கும் சந்து பகுதிக்கும் சீல் வைத்து.. அங்கேயே ஒசாமா பின்லேடனை சுட்டுகொன்றுவிட்டு அங்கிருந்து அமெரிக்க படைகள் தப்பி சென்றன.

இந்த மொத்த சம்பவத்தையும் அமெரிக்காவின் வெஸ்ட் விங்கில் இருக்கும் வார் ரூமில் இருந்து அப்போதைய அதிபர் ஒசாமா பின்லேடன் வீடியோ மூலம் பார்த்துக்கொண்டு இருந்தார். அவர் கண் பார்வையில்தான் இந்த சம்பவங்கள் அனைத்தும் நடைபெற்றன.

பாகிஸ்தானில் பதுங்கி இருந்த ஒசாமா பின்லேடனை கண்டுபிடித்தது போலவேதான் காலிஸ்தானி பிரிவினைவாதி அம்ரித்ப்பால் சிங்கையும் போலீசார் திறமையாக செயல்பட்டு கண்டுபிடித்து உள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தின் வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவரும் பிரிவினைவாதியுமான அம்ரித்பால் சிங் நேற்று போலீசாரிடம் சரணடைந்தார். அம்ரித்பால் சிங் கடந்த மார்ச் 18ம் தேதியில் இருந்து தேடப்பட்டு வந்தார். இவரை மூன்று போலீசார் படை தேடி வந்த நிலையில் பஞ்சாப்பில் இருக்கும் மோகா என்ற கிராமத்தில் இவர் போலீசில் சரண் அடைந்தார்.

How did Amritpal Singh surrender to the police and Why it connected with Osama Bin Laden operation?

அம்ரித்பால் சிங் காலிஸ்தான் - பாகிஸ்தான் தீவிரவாதி, ஏஜென்ட் என்று அரசால் வர்ணிக்கப்பட்டு வருகிறார். காலிஸ்தான் கருத்துக்களை பேச்சாளராக, பிரிவினைவாதியாக இவர் பார்க்கப்படுகிறார். காலிஸ்தான் தீவிரவாதி ஜர்னல் சிங் பின்டர்ன்வாலேவின் தீவிர பின்தொடர்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்டர்ன்வாலே 2.0 என்று அம்ரித்பால் சிங் அவரின் பின்தொடர்பாளர்கள் மூலம் வரையறுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

பிடித்தது எப்படி?: அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீஸ், அசாம் போலீஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு படை இணைந்து தேடி வந்தது. இவர்கள் மூவரின் டீம் இணைந்து இன்று அம்ரித்பால் சிங்கை கைது செய்தது.

அம்ரித்பால் சிங் மோகா என்ற கிராமத்தில் வசித்து வந்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்தே அங்கே கடந்த சில நாட்களாக போலீசார் ரோந்து பணிகளை செய்து உள்ளனர்.

அப்போது அங்கே இருக்கும் சீக்கிய குருத்வரா கோவில் ஒன்றில் அம்ரித்பால் சிங் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உள்ளே போலீஸ் சென்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும் என்று போலீசார் செல்லவில்லை.

How did Amritpal Singh surrender to the police and Why it connected with Osama Bin Laden operation?

இதனால் அந்த கோவிலை போலீசார் சுற்றி வளைத்தனர். இதனால் அம்ரித்பால் சிங் வெளியே செல்ல முடியாமல் லாக் செய்யப்பட்டார். இதன் காரணமாக வேறு வழியின்றி கடைசியில் அம்ரித்பால் சிங் போலீசார் முன்னிலையில் சரண் அடைந்தார்.

அதே ஆபரேஷன்: ஒசாமா பின் லேடனை பிடித்தது போல அதிகாலையில் இந்த ஆபரேஷனை செய்து உள்ளனர்,

அம்ரித்பால் சிங் காவல்துறையின் வலையிலிருந்து தப்பிக்க கடந்த சில நாட்களாக நான்கு மாநிலங்களைக் கடந்து எஸ்கேப் ஆகி வந்தார். பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லிக்கு இடையில், அவர் தொடர்ந்து மாறி மாறி சென்று கொண்டிருந்தார். சில நாட்களுக்கு மேல் எந்த இடத்திலும் தங்கவில்லை.

பஞ்சாபின் ஜலந்தரிலிருந்து, லூதியானாவிற்கும், பின்னர் ஹரியானாவின் குருக்ஷேத்ரா அங்கிருந்து டெல்லி, பின்னர் உத்தரபிரதேசத்தின் பிலிபிட், உத்தரகாண்டின் ருத்ராபூர், பின்னர் பஞ்சாபின் ஹோஷியார்பூர், ஜலந்தர் முதல் மோகா வரை சென்று இருக்கிறார்.

How did Amritpal Singh surrender to the police and Why it connected with Osama Bin Laden operation?

இதில் மோகாவில்தான் அவர் பிடிபட்டார். நேற்று முதல்நாள் இரவு மோகாவிற்குள் புகுந்த போலீசார் அந்த கிராமத்தை சீல் வைத்தனர். அவர் அங்கே இருந்ததை உளவு தகவல் மூலம் அறிந்துகொண்டு மொத்தமாக அந்த கிராமத்தின் எல்லை பகுதிகளில் போலீஸ் நிறுத்தப்பட்டனர்.

இந்த நடவடிக்கையை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேரில் கண்காணித்து வந்தார். வீடியோ மூலம் இந்த நிகழ்வுகளை தொடர்ந்து அவர் கண்காணித்து வந்தார்.

ஆனால் உள்ளே போலீசார் கூட்டமாக போய் கைது செய்தாலோ.. குருத்வரா உள்ளே சென்று கைது செய்தாலோ பெரிய கலவரம் வெடிக்கும் என்பதால் வெறும் 3 போலீஸ் மட்டுமே கிராமத்திற்கு உள்ளே சென்று.. குருத்வாரா வெளியே காத்து இருந்தனர்.

உள்ளே போலீஸ் சென்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும் என்று போலீசார் செல்லவில்லை. மாறாக அந்த கோவிலை போலீசார் சுற்றி வளைத்தனர். இதனால் அம்ரித்பால் சிங் வெளியே செல்ல முடியாமல் லாக் செய்யப்பட்டார். இதன் காரணமாக வேறு வழியின்றி கடைசியில் அம்ரித்பால் சிங் போலீசார் முன்னிலையில் சரண் அடைந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+