பாஜகவுக்கு செக்.. தலித் முதல்வரை நிறுத்தி கிலி தரும் காங்கிரஸ்.. என்னதான் நடந்தது பஞ்சாப் அரசியலில்?
முதல்வராக சரண்ஜித் சிங் சன்னிக்கு அமரிந்தர் சிங் தேர்வானது எப்படி
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது... ஆனால் தற்போது, புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிக்கு அமரிந்தர் சிங் வாழ்த்து தெரிவிக்கும் நிலைமைக்கு விவகாரம் சென்றுவிட்டது.. என்னதான் நடந்தது பஞ்சாப் மாநில அரசியலில்?
கடந்த 2019-ல் முதல்வருடன் நவ்ஜோத் சிங் சித்துக்கு மோதல் ஏற்பட்டது.. இருவரும் காட்டமாக வார்த்தைகளில் மோதி கொண்டனர்.. விமர்சனங்களை அள்ளி வீசி கொண்டனர்.. இதையடுத்து சித்து, மத்திய அமைச்சரவையிலிருந்து விலகினார்.
அதற்கு பிறகுதான் அவர்களின் மோதல் இன்னும் அதிகமானது.. இன்னும் சில மாதங்களில் அந்த மாநிலத்தில் தேர்தல் வர உள்ள நிலையில், சித்துக்கு காங்கிரஸ் முழு ஆதரவை தந்தது.. அமரிந்தர் சிங்குக்கு சமமாக சித்துவையும் காங்கிரஸ் நடத்தியது.. புது பதவியையும் வந்தது.. அப்போதும் இவர்களுக்கு நடுவிலான மோதல் அதிகமாகி கொண்டே வந்தது..

ஆதரவு
இதனால் இவர்களுக்கு தனித்தனியாக ஆதரவாளர்கள் பெருகினார்கள்.. ஒருகட்டத்தில் சித்துவுக்கு அதிக செல்வாக்கு எகிறியது.. எனவே, 50-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஒன்றாக இணைந்து, எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சோனியா காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார்கள்.. இதையடுத்து, நேற்று முன்தினம் சண்டிகரில் கூட்டம் நடந்தது.. இந்த கூட்டத்துக்கு அக்கட்சியின் மேலிட பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்..

நிறைவேற்றம்
புதிய முதல்வரை தேர்வு செய்ய சோனியா காந்திக்கு அதிகாரம் அளித்து அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே, தங்கள் மாநிலத்தில் என்ன நடந்தது? தான் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டேன் என்பதை விவரித்து அமரிந்தர் சிங் சோனியாவுக்கு விளக்கி ஒரு கடிதம் எழுதினார்... பிறகு பதவியும் விலகினார்.

அம்பிகா சோனி
புதிய முதல்வராக யாரை நியமிப்பது என்ற சிக்கல் அடுத்ததாக எழுந்தது.. காரணம், கட்சியின் சீனியர்களில் ஒருவரான அம்பிகா சோனியை நிறுத்த கட்சி மேலிடம் நினைத்தது.. ஆனால், அவரோ, பஞ்சாப்பில் சீக்கியர் ஒருவர்தான் முதல்வராக என்ற தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டார்.. தனக்கு வந்த வாய்ப்பையும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.. சீக்கியர் தலைமையில் ஆட்சி என்றதுமே சித்து, சுனில் ஜாக்கர், திரிப்த் ராஜிந்தர்சிங் பஜ்வா, சுக்ஜிந்தர் சிங் ரந்தவா என்று வரிசையாக பெயர்கள் அடிபட்டன...

எதிர்ப்பு
இதனால் இவர்களில் யாரை தேர்ந்தெடுப்பது என்ற கூட்டமும் நடந்தது.. இதற்கு நடுவில் அமரிந்தர் சிங் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "நவ்ஜோத் சிங் சித்து ஒரு திறமையற்ற மனிதர்.. அவர் ஒரு பேரழிவாக இருக்கப் போகிறார். அடுத்த முதல்வருக்கான போட்டியில் அவரது பெயரை பரிந்துரை செய்தால் நான் கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பேன். காரணம், அவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளது... இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும்" என்று கூறியிருந்தார்.

சித்து
அமரிந்தரின் இந்த பேட்டி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.. ஒருவேளை சித்துவை தேர்ந்தெடுத்தால், மேலும் உட்கட்சி பூசல் அதிகரிக்கும் என்ற சலசலப்பும் ஏற்பட்டது.. இறுதியில் சரண்ஜித் சிங் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார்.. சித்துவின் ஆதரவாளர் என்பதால், பெரிய அளவில் எதிர்ப்பு இவருக்கு எழவில்லை.. இப்படிப்பட்ட சூழலில்தான் புது முதல்வருக்கு அமரிந்தர் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தலித் முதல்வர்
இப்போது விஷயம் என்னவென்றால், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால், தலித் ஒருவரை முதல்வராக ஆக்குவோம் என்று பாஜக ஏற்கனவே கூறியிருந்த நிலையில், மீண்டும் அதே விஷயத்தை பாஜக இப்போது தீவிரமாக்கி வருகிறது.. மற்றொருபுறம், கூட்டணியில் இருந்து விலகியுள்ள சிரோமணி அகாலிதளம், பகுஜன் சமாஜ் கட்சியுடன் சேர்ந்து சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது...

போட்டி
இவர்கள் இருவருக்கும் நடுவில்தான் தலித் தலைவர் ஒருவரை பஞ்சாப் முதல்வராக அறிவித்துள்ளது.. இதற்கு காரணம், சரண்ஜித் சிங் சன்னி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 33% வரை தலித்துகள் உள்ளனர். எனவே, அடுத்த ஆண்டு நடைபெற்று சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். ஆக, காங்கிரசுக்கும் - பாஜகவுக்கும் நேரடி போட்டி இனி இங்கு வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications