ஹரியானா கலவரத்திற்கு கை காட்டப்படும் மோனு மனேசர்..யார் இவர்? இவருக்கும் கலவரத்திற்கும் என்ன தொடர்பு?
சண்டிகர்: ஹரியானாவில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு நடத்திய பேரணியின் போது மற்றொரு தரப்புடன் மோதல் ஏற்பட்டு வெடித்த வன்முறையில் 5 பேர் பலியாகினர். இந்த மோதல் ஏற்பட காரணமாக சொல்லப்படும் மோனு மனேசர் யார்? அவருக்கும் இந்த பிரச்சினைக்கும் என்ன தொடர்பு என்பதை பற்றி பார்க்கலாம்.
ஹரியானா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் மத ஊர்வலம் நேற்று நடைபெற்றது. குருகிராம் மாவட்டத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் நூ மாவட்டத்திலும் தொடர்ந்தது. போலீசாரும் ஊர்வலத்திற்கு பலத்த பாதுகாப்பு போட்டு இருந்தனர். எனினும் நூ மாவட்டத்தின் கேட்லா மோட் பகுதியில் ஊர்வலம் சென்றபோது மற்றொரு பிரிவை சேர்ந்த சில இளைஞர்கள் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரின் பேரணியை தடுத்து நிறுத்தினர்.

மேலும் ஊர்வலமாக வந்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மீது கல்வீசி தாக்கியதாக தெரிகிறது.
இதனால், இரு தரப்பினருக்கு இடையே பயங்கர வன்முறை வெடித்தது. இரு தரப்பும் கற்களை வீசி மாறி மாறி தாக்கினர். இந்த பயங்கர மோதலில், இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து ஹரியானாவில் பதற்றம் தொடருகிறது. அம்மாநிலத்தில் மொபைல் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, பஜ்ரங் தள ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ காரணமாக இந்த கலவரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பஜ்ரங் தள உறுப்பினரான மோனு மனேசர் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த சர்ச்சை வீடியோவை சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் பகிர்ந்ததாகத் தெரிகிறது. பசுவதை செய்யப்பட்டதாக இரண்டு இளைஞர்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மோனு மனேசர் என்பவர் ஊர்வலத்தில் நானும் வருவேன் என்று கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஊர்வலத்தில் இளைஞர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர் என போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. மோகித் யாதவ் அல்லது மோனு மனேசர் என்ற பெயர் கொண்ட இவர் பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர். இவர் தன்னை பசுக்களின் பாதுகாவலர் என்று சொல்லிக்கொண்டார். குருகிராம் அருகே உள்ள மனேசர் பகுதியை சேர்ந்த இவர் பஜ்ரதங் தள் அமைப்பின் பசு பாதுகாப்பு பிரிவான கோரக்ஷா தள் என்பதின் தலைவராகவும் இருந்தார்.
பசு கடத்தலை கண்காணித்து அது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கும் பணியை இவர் செய்து வந்தார். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் மோனு மனேசர் தலைமையிலான குழுவினர் இந்த சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்து தாக்க தொடங்கினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த இருவர் கொலைக்கு மோனு மேனசர் மீது நேரடியாக குற்றம் சாட்டப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications