இதுதான் இணையம்.. ஒரே ட்விட்.. இளைஞரின் வாழ்க்கையை மாற்றிய நெட்டிசன்கள்.. மனதை லேசாக்கும் சம்பவம்!
சண்டிகர்: ராஜஸ்தானில் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவரின் வாழ்க்கையை நெட்டிசன்கள் சேர்ந்து மாற்றிய சம்பவம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
சமீப நாட்களாக உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் பலர் பைக் பயன்படுத்தாமல் சைக்கிளில் வருவது வழக்கமாகி இருக்கிறது. சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூர், கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் உணவு டெலிவரி செய்யும் பலர் பைக்கிற்கு பதிலாக சைக்கிளில் டெலிவரி செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது.
பெங்களூரில் சிறிய அளவிலான பேட்டரி பைக்குகளில் பலர் டெலிவரி செய்வது வழக்கமாகி உள்ளது. பலர் பெட்ரோல் விலை உயர்வால், பொருளாதார நிலையால் சைக்கிளில் டெலிவரி செய்கிறார்கள்.

உணவு ஆர்டர்
ஆனால் உரிய நேரத்தில் சைக்கிளில் உணவு டெலிவரி செய்வது என்பது மிகவும் கடினம். இந்த நிலையில்தான் இப்படி சைக்கிளில் டெலிவரி செய்யும் டெலிவரி பாய் ஒருவருக்கு நெட்டிசன்கள் இணைந்து உதவி செய்துள்ளனர். ராஜஸ்தானை சேர்ந்தவர் ஆதித்யா சர்மா, இவர் சமீபத்தில் சோமேட்டோ நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்துள்ளார். உணவு ஆர்டர் செய்து டெலிவரி நேரத்திற்கு முன்பாக அவருக்கு உணவு டெலிவரி செய்யப்பட்டு இருக்கிறது.

சோமேட்டோ நிறுவனம்
இதில் வியப்பு என்னவென்றால், அந்த உணவு டெலிவரி செய்த துர்கா மீனா என்ற நபர் அதை சைக்கிளிலேயே வந்து டெலிவரி செய்துள்ளார். ராஜஸ்தானில், கோடை காலத்தில் 42 டிகிரி செல்ஸியஸ் வெப்ப நிலையில் இவர் வந்து உணவை உரிய நேரத்தில் டெலிவரி செய்துள்ளார். துர்கா மீனாவிற்கு 31 வயதாகிறது. கடந்த 4 மாதமாக உணவு டெலிவரி செய்து வருகிறார்.

உணவு டெலிவரி
அதில் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார். அவர் இதற்கு முன் ஆசிரியராக இருந்தார். 12 வருடம் ஆசிரியர் பணியில் இருந்தார். ஆங்கிலம் நன்றாக பேச கூடிய துர்கா மீனா ஆங்கில வகுப்புகளை எடுத்து வந்தார். இந்த நிலையில் கொரோனா காலத்தில் இவருக்கு வேலை போனதால் இப்படி உணவு டெலிவரி வேலைக்கு வந்து இருக்கிறார். பி காம் படித்த இவர் எம் காம் படிப்பதற்காக காசு சேர்த்து வருகிறார்.

பைக்
அதோடு டெலிவரி செய்ய வசதியாக பைக் வாங்குவதற்கும் இவர் காசு சேர்த்து வருகிறார். இந்த நிலையில் உணவை பெற்றுக்கொண்ட ஆதித்யா.. டெலிவரி செய்ய வந்த துர்கா மீனாவிடம்.. உங்களுக்கு பைக் வாங்க எவ்வளவு தேவை என்று கேட்டு இருக்கிறார். அதற்கு எனக்கு முன் பணம் மட்டுமே தேவை. மற்றபடி இஎம்ஐ நானே கட்டிவிடுவேன். அதன்பின் முன்பணத்தையும் வட்டியோடு கொடுத்துவிடுவேன் என்று கூறி இருக்கிறார் துர்கா மீனா.

மொத்த பண உதவி
ஆனால் ஆதித்யாவோ அவருக்கு மொத்தமாக பணம் கொடுத்து உதவ வேண்டும் என்று நினைத்து இருக்கிறார். இதையடுத்து ஆதித்யா சர்மா.. இணையத்தில் நெட்டிசன்களிடம் உதவி கேட்டு உள்ளார்.. அவருக்கு பைக் வாங்க 75 ஆயிரம் ரூபாய் தேவை. 75 ஆயிரம் பேர் 1 ரூபாய் அனுப்பினால் போதும். துர்கா மீனாவிற்கு புதிய பைக் வாங்க முடியும் என்று ஆதித்யா சர்மா ட்விட் செய்துள்ளார். அதோடு இதற்காக வங்கி கணக்கையும் கொடுத்துள்ளார்.

குவிந்த உதவி
இந்த போஸ்ட் செய்த சில நிமிடங்களில் பலர் உதவி செய்ய முன் வந்துள்ளனர். தொடர்ச்சியாக பலர் 100, 200 என்று பணம் அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் மறுநாளே தேவையான 75 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த டெலிவரி பாய் துர்கா மீனாவிற்கு ஆதித்யா சர்மா புதிய பைக்கை வாங்கி கொடுத்தார். அவரை ஷோ ரூமிற்கு அழைத்து சென்று நல்ல மைலேஜ் தர கூடிய ஹீரோ பைக்கை வாங்கி கொடுத்துள்ளார்.

நன்றி
இந்த சம்பவத்தை அவர் வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார். துர்கா மீனா புதிய பைக் கிடைத்ததும் உணர்ச்சிவசப்பட்டு ஆதித்யாவை கட்டிப்பிடித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்வு பலரையும் உருக்கி உள்ளது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து.. வெறுப்புகள் பரப்பப்படும் இந்த இணைய காலத்தில் இது போன்ற சம்பவங்கள்தான் மனிதம் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது புகழ்ந்து பாராட்டி உள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications