"மூளை" நரம்புகளை குறிவைக்கும் நச்சு வாயு.. அடுத்தடுத்து சரிந்த மக்கள்! பஞ்சாபில் உண்மையில் என்னாச்சு
சண்டிகர்: பஞ்சாபின் லூதியானாவின் வாயு கசிவு ஏற்பட்டதில் பலர் உயிரிழந்த நிலையில், இந்த வாயு எந்தளவுக்கு ஆபத்தானது.. இதனால் என்ன மாதிரியான ஆபத்து ஏற்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் கியாஸ்புரா பகுதியில் பல தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. சிறிதும் பெரிதுமாக அங்கே பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கே தான் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது.
கியாஸ்புரா பகுதியில் உள்ள சிறிய தொழிற்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கே உள்ளே பால் பொருட்கள் தயாரிப்பு ஆலையில் கேஸ் லீக் ஏற்பட்டுள்ளது. இதனால் உள்ளே இருந்த அனைவரும் சுயநினைவை இழந்துள்ளனர்.

பஞ்சாப் கேஸ் லீக்: பலரும் லீக்கான கேஸ்ஸை சுவாசித்து அடுத்தடுத்து மயங்கிய நிலையில், அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காலை நேரம் நடந்த இந்தச் சம்பவம் குறித்துத் தெளிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த பஞ்சாப் கேஸ் லீக் சம்பவம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கேஸ் லீக் சம்பவம் என்பதால் சம்பவ இடத்திற்கு உடனடியாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்தனர். அங்கிருந்தவர்களிடம் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், கேஸ் லீக் என்பதால் அக்கம் பக்கத்தினரையும் வெளியேற்றும் நடவடிக்கையில் அவர்கள் இறங்கியுள்ளனர். சுமார் 300 மீட்டர் தொலைவுவரை கேஸ் லீக் சம்பவத்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

மீட்புப் பணிகள்: சம்பவ இடத்தில் தேசிய மீட்புப் படையினர் வந்துள்ள நிலையில், அவர்கள் பாதுகாப்பிற்காக மாஸ்க் அணிந்து பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளைச் செய்து வருகின்றனர். அந்த ஆலையைச் சுற்றிக் குறிப்பிட்ட தூரத்திற்கு உள்ளூர் மக்கள் வரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கேஸ் லீக் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே இந்த வாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தரப்படும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உறுதியளித்துள்ளார்.
ஆபத்தான கேஸ் வகை: இதற்கிடையே லீக்கான கேஸ் குறித்தும் இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. அதவாது பஞ்சாபில் லீக்கானது நரம்புகளைக் குறிவைத்துத் தாக்கும் நச்சு வாயு என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து லூதியானா சிவில் சர்ஜன் டாக்டர் ஹதீந்தர் கவுர் கூறுகையில், "லீக்கான கேஸ் நரம்புகளைத் தாக்கும் நச்சுத்தன்மை கொண்டது.. உயிரிழந்தோருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், மூச்சுத் திணறலால் எந்தவொரு உயிரிழப்பும் பதிவாகவில்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் நரம்பு மண்டலத்தில் வாயு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

நியூரோ டாக்ஸிக் வாயு: இந்த நியூரோ டாக்ஸிக் வாயுவால் நியூரோடாக்சிசிட்டி ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட நியூரோ டாக்ஸிக் பொருட்கள் நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டை மாற்றும்போது நியூரோடாக்சிசிட்டி ஏற்படுகிறது. இது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் சிக்னலகளை கடத்தும் நியூரான்களை (நரம்பு செல்கள்) சீர்குலைக்கும் ஆபத்துகள் உள்ளன.
சிறிது நேரம் இந்த நியூரோ டாக்ஸிக் வாயுக்களைச் சுவாசித்தாலே மோசமான பாதிப்புகள் ஏற்படும். அப்படியொரு மோசமான சம்பவம் தான் பஞ்சாபில் இப்போது நடந்துள்ளது. இதில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications