NIGHT CURFEW: விடாமல் மிரட்டும் கொரோனா.. பஞ்சாப்பிலும் லாக்டவுன்.. பள்ளி, கல்லூரிகள் மூடல்

பஞ்சாப்பில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

கொரோனா ஒரு பக்கம், ஒமிக்ரான் மறுபக்கம் என வைரஸ்கள் நாட்டு மக்களை பீதியில் வைத்து வருகின்றன.. இதனால், தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்தபடியே வருகிறது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த மாவட்டம் வாரியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

 ஏர்போர்ட்

ஏர்போர்ட்

மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.. ஏர்போர்ட்களில் கூடுதல் கண்காணிப்பு பணி தீவிரமாக்கப்பட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளதோடு, வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிக்க ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

 லாக்டவுன்

லாக்டவுன்

அதேபோல, கேரளா, கர்நாடகா, டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநில அரசு, மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்படுவதாகவும், மக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது.. அந்த வகையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பஞ்சாப் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது...

 தெலுங்கானா

தெலுங்கானா

ஏற்கனவே, மும்பை, தெலங்கானா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பஞ்சாப் மாநிலத்திலும் பள்ளி, கல்லூரிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. எனினும், ஒரு சில மாநிலங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போதைக்கு பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா கேஸ்கள் தினமும் அதிகரித்தபடியே உள்ளன.. தற்சமயம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மட்டும் 1,741 ஆக இருந்து வருகிறது..

 விடுமுறை

விடுமுறை

ஒமைக்ரான் வைரஸ் பரவல் எதிரொலியால், ஜனவரி 15ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுவரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் என்றும், ஏசி பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது... இந்த நடைமுறைகளை லாக்டவுன் போட்ட அனைத்து மாநிலங்களுமே தீவிரமாக கடைப்பிடித்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+