சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிர்ச்சி! 60 பெண்களின் அந்தரங்க வீடியோ லீக்கா? சக மாணவியே கசிய விட்டது எப்படி? போலீஸ் சொல்வது என்ன?

Google Oneindia Tamil News

சண்டிகர்: சண்டிகர் பல்கலைக்கழகத்தில் 60 மாணவிகளின் வீடியோ கசியவிடப்பட்டதாக வெளியான புகார் குறித்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

பிரபல சண்டிகர் பல்கலைக்கழத்தில் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவிகளின் வீடியோதான் இப்படி லீக் ஆகி உள்ளது. சக மாணவி ஒருவரே வீடியோக்களை எடுத்து அதை இணையத்தில் கசியவிட்டுள்ளார். இதையடுத்து அந்த மாணவி தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்த லீக்கான வீடியோக்கள் சண்டிகர் பல்கலைக்கழத்தில் மாணவர்கள், மாணவிகள் இடையே வாட்ஸ் ஆப்பில் வலம் வந்துள்ளது.

 சண்டிகர் பாத்ரூம் வீடியோ லீக்.. உண்மையில் நடந்தது என்ன? சண்டிகர் பல்கலைக்கழகம் பரபர விளக்கம் சண்டிகர் பாத்ரூம் வீடியோ லீக்.. உண்மையில் நடந்தது என்ன? சண்டிகர் பல்கலைக்கழகம் பரபர விளக்கம்

சண்டிகர்

சண்டிகர்

இந்த சம்பவம் பெரிதாகி உள்ள நிலையில் இதில் சில சர்ச்சைகளும் எழுந்துள்ளன. அதன்படி இந்த சம்பவம் தொடர்பாக 7 மாணவிகள் தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்பட்டது. 7 மாணவிகள் தங்கள் வீடியோ ரிலீஸ் ஆனதால் தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்பட்டது. ஆனால் போலீசார் இதை மறுத்துள்ளனர். 2 மாணவிகள் மட்டுமே மயக்கம் அடைந்தனர். அவர்களும் இரவு முழுக்க போராட்டம் செய்ததால் சோர்வு அடைந்தனர். இந்த முயற்சியில் மயக்கம் அடைந்தனர்.

தற்கொலை இல்லை

தற்கொலை இல்லை

மற்றபடி யாரும் தற்கொலை செய்யவில்லை. இருப்பினும் மாணவிகள் யாரும் தவறான முடிவுகளை எடுக்காத வண்ணம் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் 60 வீடியோக்கள் எல்லாம் இல்லை என்றும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். 60 வீடியோக்கள் கசிய விடப்பட்டதாக தவறான தகவல் பரவுகிறது. ஆனால் 1 வீடியோ மட்டுமே இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த வீடியோ நீக்கப்பட்டு உள்ளது என்று போலீசார் தரப்பு தெரிவித்துள்ளது.

வீடியோ

வீடியோ

இருந்தாலும் சக மாணவி வீடியோவை எப்படி கசியவிட்டார். இவருக்கு பின்னால் வேறு எதுவும் கும்பல் இருக்கிறதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னொரு பக்கம் விடுதியில் மாணவிகள் குளிப்பதை அந்த குறிப்பிட்ட மாணவி வீடியோ எடுத்ததாக கூறப்படுவதே பொய். அவர் 60 வீடியோக்களை தனது ஆண் நண்பருக்கு அனுப்பியதாக வெளியான செய்திகள் தவறானவை. அதில் உண்மை இல்லை. அந்த பெண் தனது காதலனுடன் பகிர்ந்து கொண்ட தனிப்பட்ட வீடியோ மட்டுமே கிடைத்துள்ளது.

பின்னணி

பின்னணி

அது மட்டுமே லீக்காகி உள்ளது என்று சண்டிகர் பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும் மாணவிகள் தரப்போ.. அப்படி எல்லாம் இல்லை. நிறைய வீடியோக்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதை பல்கலைக்கழக நிர்வாகிகள் மறைக்கிறார்கள். அவர்கள் இந்த விஷயத்தை பெரிதாகாமல் மறைக்க பார்க்கிறார்கள். அதனால் இப்படி மாணவிகள் வீடியோ விவகாரத்தை பற்றி தவறாக விளக்கம் அளிக்கின்றனர் என்று மாணவிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

English summary
No, the Bathroom video of 60 students was not leaked says Police and Chandigarh University./
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X