Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னாது.. பாகிஸ்தான், வங்கதேசம், இந்தியாவோடு இணையுமா.. பாஜக முதல்வர் பளீர் யோசனை!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஜெர்மனி நாடு இணைக்கப்பட்டது போல, பாகிஸ்தானையும் வங்காளதேசத்தையும் இந்தியாவோடு இணைத்துவிடலாம் என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் சிறுபான்மை பிரிவு ஆலோசனை பயிற்சிக்கூட்டமான மைனாரிட்டி மோர்ச்சா கூட்டம் குருகிராமில் உள்ள பாஜக மாநிலக்கூடத்தில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

நேற்று நடந்த இந்த கூட்டத்தை அரியானா முதல்வரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான மனோகர் லால் கட்டார் தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

Pakistan and Bangladesh can be annexed to India like Germany was annexed-Manohar lal khattar

கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் ஒருங்கிணைக்க முடியும் என்றால் பாகிஸ்தானையும் வங்காளதேசத்தையும் இந்தியாவுடன் இணைப்பது சாத்தியமானதே. இந்தியாவில் ஜனநாயக முறைப்படி பழங்குடியின பெண் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். நமது இந்தியாவில் மட்டுமே இது சாத்தியம்.

இந்தியாவில் ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்கும் அதே நேரத்தில், வங்காளதேசத்திலும் பாகிஸ்தானிலும் சண்டைகள் நடைபெற்று வருகின்றன. மற்றொரு நாட்டில் ஜனாதிபதி தப்பி ஓடுகிறார். அங்கு அமைதி இல்லை. பாஜகவின் பிரதான இலக்கு என்னெவென்றால், இந்தியாயவை உலக நாடுகளின் தலைவராக்குவதே ஆகும். என்று பேசியுள்ளார்.

மெலும் அவர் கூறுகையில், ''சங் பரிவார் இயக்கங்கள் மீது பயத்தை காட்டி சிறுபன்மை மக்கள் மத்தியில் பாதுகாப்பின்மை உணர்வை காங்கிரஸ் ஏற்படுத்தியது. ஆனால், பாஜகவின் செயல் மற்றும் வார்த்தைகளை மக்கள் படிப்படியாக புரிந்துகொள்ள தொடங்கியுள்ளனர். காங்கிரஸின் சிந்தனை மற்றும் சித்தாந்தத்தையும் சிறுபான்மையினர் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். 1984 ஆம் ஆண்டு லோக்சபாவில் பாஜகவுக்கு வெறும் 2 சீட்டுக்கள் மட்டுமே கிடைத்தன.

ஆனால் 12 ஆண்டுகள் கழித்து அடல் விகாரி வாஜ்பாய் ஆட்சி அமைத்தார். பிற கட்சிகளை சார்ந்து அப்போது ஆட்சி அமைக்கப்பட்டது. ஆனால் 2014 ஆம் ஆண்டு மோடி அரசு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. தற்போது மைனாரிட்டிகள் மத்தியிலும் பாஜக மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக முஸ்லீம்கள் மத்தியில் பாஜக மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது" என்றார்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கிளர்ச்சி வெடித்தது. அதிபர் ராஜபக்சே பதவி விலகக் கோரி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மாளிகைக்குள் புகுந்ததனர். இதனால், அதிபர் மாளிகையில் இருந்து ஓடிய கோத்தபய ராஜபக்சே, மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல் பாகிஸ்தானிலும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது. இதை குறிப்பிட்டு தான் தற்போது அரியானா முதல்வர் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+