ஹலோ.. சார் பாடி கிடக்கு.. சீக்கிரம் வாங்க.. அதிர வைத்த ரேவரி பயங்கரம்..! (பார்ட் 1)
2 கொலைகளை செய்த பாடி பில்ட்டரை போலீசார் கைது செய்துள்ளனர்
சண்டிகர்: ஓவென்று நீண்டு கிடந்தது அந்த சாலை.. ஆளரவமே இல்லை.. விர்ரென்ற சத்தத்துடன் சீறிப் பாய்ந்து கடந்தோடியது ஒரு கார்.. அவ்வப்போது சில லாரிகள்.. கடுமையான குளிர்.. அது டிசம்பர் 7ம் தேதி.
டிரிங்.. டிரிங்.. "அரே பாய்.. தேக்கோ.. கோன் ஹே".. என்று அரைகுறை தூக்கக் கலக்கத்தில் அடிக்கிற போனை எடுக்கச் சொன்னார் ரேவரி காவல் நிலைய ஏட்டு. இரவுப் பணியில் இருந்த இன்னொரு காவலர் ரிசீவரை எடுத்து காதில் வைத்தார்.. "சார்.. ரேவரி நெடுஞ்சாலையில் ஒரு பெண் பிணம் கிடக்கு.. சீக்கிரம் வாங்க" . போன் கட் ஆனது.
அந்தக் குளிரிலும் திடுக்கிட்ட அந்த காவலர், ஏட்டை அலர்ட் செய்ய காவல் நிலையம் பரபரப்படைந்தது. ரேவரி நெடுஞ்சாலையை நோக்கி பறந்தது ஜீப்.. விர் விர்ரென பறந்து போய்க் கொண்டிருந்த வாகனங்களின் ஹெட்லைட் வெளிச்சம் பட்டு அந்த உடல் தான் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்தது.

துப்பாக்கி
போலீஸ் படை அருகில் சென்று பார்த்தபோது அந்த பெண்ணின் உடல் சல்லடையாக துளைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்தனர். துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியுள்ளனர். ரேவரி ஹரியானா மாநிலம் தாருஹேரா மவட்டத்தில் உள்ளது. அங்கு பிணமாகக் கிடந்த பெண்ணுக்கு 22 வயது இருக்கும். மொத்தம் நான்கு புல்லட்டுகள் உடலில் பாய்ந்திருந்தன. உடலை போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்ப உத்தரவிட்ட போலீஸார் அடுத்த கட்ட விசாரணையில் குதித்தனர்.

திடுக் தகவல்கள்
விறுவிறு விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அந்தப் பெண்ணின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர். டெல்லியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இவர் ஏன் ரேவரியில் பிணமாகக் கிடந்தார் என்பது தெரியாமல் போலீஸார் குழம்பினர். விசாரணை மேலும் முடுக்கி விடப்பட்டது.

போஸ்ட் மார்ட்டம்
இந்த நிலையில் பெண்ணின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் டிஎஸ்பி ஜமால் கான் கைக்கு வந்து சேர்ந்தது. பிரித்துப் பார்த்த அவர் , அந்தப் பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்பதை அறிந்து மேலும் குழம்பினார். அடையாளம் தெரியாதோரால் செய்யப்பட்ட கொலை என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பலாத்காரமும் இல்லை என்றால் ஏன் இவர் கொலை செய்யப்பட்டார் என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்தது.

புதிய தகவல்கள்
ராஜஸ்தானுக்கு விரைந்தது ஹரியானா போலீஸ். அங்கு அந்தப் பெண்ணின் தந்தையிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சில புதிய தகவல்கள் கிடைத்தன. கிடைத்த தகவல்கள் போலீஸாரையே அதிர வைத்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications