எல்லாம் பிரண்ட்ஷிப்பிற்காக! மனைவியை 5 நண்பர்களுடன் சேர்ந்து கணவனே பலாத்காரம்.. ஷாக்கான போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் 20 வயது இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரது கணவர் உட்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் பகுதியை சேர்ந்த 20 வயது இளம் பெண்ணுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக இருவருக்கும் இடையே சிறு சிறு சண்டைகள் வந்துள்ளன. அதேபோல கோபத்தில் சில நேரம் கணவர் இளம்பெண்ணை தாக்கியுள்ளார். இப்படியே போய்க்கொண்டிருக்கையில் இளம்பெண் திடீரென விபத்தில் சிக்கியுள்ளார்.

இதில் அவரது கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதால் நடக்க சில நாட்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர். ஆனால் இவரது கணவர் சிகிச்சைக்கு எந்த உதவியும் செய்யாமல் இருந்திருக்கிறார். அப்போதே இந்த பெண் தனது சகோதரர்களிடம் சென்று சேர்ந்திருக்கிறார். அவர்கள்தான் இளம்பெண்ணை சிகிச்சைக்கு அனுப்பி பராமரித்து வந்திருக்கின்றனர். இப்படியே இருக்கையில் இளம்பெண்ணுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறி வந்திருக்கிறது. நடக்கத் தொடங்கிய அவர் சிறு சிறு வேலைகளை செய்து வந்துள்ளார்.

மீண்டும் கணவன் வீடு

மீண்டும் கணவன் வீடு

இந்த நேரத்தில் இவரது கணவர் மீண்டும் இவரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். இருவருக்கும் இடையே பெரியதாக எந்த சண்டையும் உருவாகவில்லை. எனவே இப்பெண்ணும் கணவர் வீட்டிலேயே இருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி இவருக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்திருக்கிறது. மறுமுனையில் பேசிய கணவர், இவரை ஜண்டியாலா குருவில் உள்ள வால்மீகி சௌக் அருகே வருமாறு அழைத்திருக்கிறார். அங்கு இவருக்காக காத்திருந்த இவரது கணவர், இவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு நகரின் குடியிருப்பு பகுதிகளுக்கு வெளியே சென்றிருக்கிறார்.

கணவனின் நண்பர்கள்

கணவனின் நண்பர்கள்

இவரது மனைவியும் என்ன நடக்கிறது என்று புரியாமல் எங்கே போகிறோம் என்று கேட்டுக்கொண்டே வந்திருக்கின்றார். பின்னர் ஆளற்ற ஒரு முட்புதரின் அருகே பைக் நின்றிருக்கிறது. அங்கே கணவரின் நண்பர்கள் ஐந்து பேர் இருந்திருக்கின்றனர். இந்நிலையில் கணவருடன் சேர்ந்து 6 பேரும் இப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். என்ன நடக்கிறது என்று கணிப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்துள்ளது. இப்பெண் எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் இப்பெண்ணை விடவில்லை. இதற்கு இப்பெண் எதிர்ப்பு தெரிவிக்கையில் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

புகார்

புகார்

பின்னர் ஆறு பேரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து முழித்து பார்க்கையில் உடைகள் அனைத்தும் கிழிந்திருக்கிறது. அங்கிருந்து எப்படியோ தப்பித்து தனது சகோதரர் வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கிறார். சம்பவம் குறித்து புகார் அளிக்கலாம் என்று சகோதரர்கள் கூறியதை முதலில் இளம்பெண் ஏற்கவில்லை. தொடர்ந்து சகோதரர்கள் கொடுத்த நம்பிக்கையையடுத்து பெண் நேற்று பஞ்சாப் மாநில காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரையடுத்து காவல்துறையினர் 6 பேர் மீதும் வழக்கப்பதிவு செய்துள்ளனர்.

காவல்துறை

காவல்துறை

இந்த தகவலையறிந்த குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் ஆறு பேரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். கடந்த சில வருடங்களாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிக அளவில் நடந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த குற்றங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+