Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அவருக்காக பாக். பிரதமர் நேரடியாக பேசினார்.." அமரிந்தர் சிங் அடுத்த அட்டாக்! நவ்ஜோத் சித்து கப்சிப்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பஞ்சாப் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், நவ்ஜோத் சிங் சித்து குறித்து முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட 5 மாநில தேர்தல் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. இதில் பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப். 20ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.

இதில் மற்ற 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இதனால் அங்கு ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது.

 பஞ்சாப் காங்கிரஸ்

பஞ்சாப் காங்கிரஸ்

ஆனால், கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான அமரிந்தர் சிங்கிற்கும் சித்துவுக்கும் இடையே இருந்த மோதல் அதிகரித்ததால் தான் அமரிந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்த நீக்கப்பட்டார். அதன் பின்னர் சரன்ஜித் சிங் சன்னி முதல்வராக்கப்பட்ட நிலையில், அவருடனும் கூட சித்து சுமுகமான போக்கைக் கொண்டிருக்கவில்லை.

 அடுத்த அட்டாக்

அடுத்த அட்டாக்

இது பஞ்சாப் காங்கிரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எளிதாக வெல்ல வேண்டிய தேர்தலில் காங்கிரஸ் வலியத் தோல்வியடைய அனைத்து முயற்சிகளையும் செய்வதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்தச் சூழலில் நவ்ஜோத் சிங் சித்து குறித்து முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ள கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தன்னிடம் சித்துவுக்கு ஆதரவாகப் பேசியதாக அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

 பாகிஸ்தானில் இருந்து வந்த கால்

பாகிஸ்தானில் இருந்து வந்த கால்

அமரிந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசின் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த நவ்ஜோத் சித்து கடந்த 2019இல் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது தான் பாக். பிரதமர் தன்னிடம் சித்துவுக்கு பேசியதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சித்து அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட உடன் பாகிஸ்தான் நாட்டில் இருந்து எனக்கு ஃபோன் கால் வந்தது.

 பிரதமர் இம்ரான் கான்

பிரதமர் இம்ரான் கான்

அப்போது பாகிஸ்தான் பிரதமர், சித்து தனது பழைய நண்பர் என்றும் அவரை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்றும் குறிப்பிட்டார். மேலும், அமைச்சர் பொறுப்பை அவர் சரிவரச் செய்யவில்லை என்றால் நீங்கள் அவரை நீக்கலாம் என்றும் பாக். பிரதமர் என்னிடம் தெரிவித்தார்" என்றும் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அமரிந்தர் சிங்கின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 சித்து அமைதி

சித்து அமைதி

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சித்துவும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். முன்னதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சித்து பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்று அந்நாட்டின் ராணுவ தளபதி உடன் இருப்பது போன்ற படங்கள் வெளியாகியிருந்தது. இது இந்திய ராணுவத்தில் சேவை புரிந்த அமரிந்தர் சிங்கிற்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் அதன் பின்னரே இருவருக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்ததாக கூறப்படுகிறது.

 பஞ்சாப் தேர்தல் களம்

பஞ்சாப் தேர்தல் களம்

பஞ்சாப் மாநிலத்தில் தற்போது 5 முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் உள்ள 117 இடங்களில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தனித்துக் களமிறங்குகின்றனர். மறுபுறம் அமரிந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் பாஜக உடன் இணைந்து களமிறங்குகிறது. இது தவிர அகாலி தளம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளும் கூட்டணி அமைத்துத் தேர்தலில் களமிறங்குகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+