உயிரே போச்சே! வீட்டை விட்டு வெளியே போன மகள்! பைக்கில் உடலை கட்டி இழுத்து சென்ற தந்தை! ஷாக் வீடியோ
சண்டிகர்: பஞ்சாப்பில் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்ற மகளுக்கு தந்தை கொடுத்த கொடூர தண்டனையால் உயிரே போய்விட்டது. அதோடு ஆத்திரம் அடங்காத அந்த தந்தை அவரது உடலுக்கு இழைத்த கொடூரம் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. அப்படி என்ன நடந்தது?
பஞ்சாப் மாநில அமிர்தசரஸ் மாவட்டம் முச்சல் கிராமத்தை சேர்ந்தவர் தால்பீர் சிங் என்ற பாவ். இவர் கூலித்தொழிலாளியாக உள்ளார். இவருக்கு மொத்தம் 5 குழந்தைகள். அதாவது 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இவரது 3வது மகளுக்கு வயது 20 ஆகும். இந்நிலையில் தான் கடந்த 9 ம் தேதி அவரது 3வது மகள் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இரவில் அவர் வீட்டுக்கு வரவில்லை. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை ஆங்காங்கே தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனால் குடும்பத்தினர் சோகமடைந்தனர். இந்நிலையில் தான் மறுநாள் அதாவது 10ம் தேதி அவரது மகள் வீட்டுக்கு வந்தார். அப்போது தந்தை பாவ் மற்றும் குடும்பத்தினர் அவரிடம் வீட்டில் யாரிடமும் சொல்லாமல எங்கு சென்றாய்? என கேட்டனர். இந்த வேளையில் கோபமடைந்த பாவ் அவரை தாக்கினார். இதை பார்த்து ஷாக்கான குடும்பத்தினர் அவரை தடுத்தனர்.
இந்த வேளையில் குடும்பத்தினரை வீட்டில் உள்ள அறையில் அடைத்து வைத்த பாவ், கூரிய ஆயுதங்களை எடுத்து அவரை குத்தியும், வெட்டியும் படுகொலை செய்தார். மேலும் ஆத்திரம் தாங்காத பாவ் தனது மகளின் உடலை கயிறு உதவியுடன் பைக்கில் கட்டி தரதரவென ரோட்டில் இழுத்து சென்று தண்டவாளத்தில் போட்டார்.
ரத்தம் சொட்ட சொட்ட பெற்ற மகளே பைக்கில் கட்டி இழுத்து சென்ற பாவின் மனசாட்சி இல்லாத செயலை பார்த்து அந்த பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தண்டவாளத்தில் கிடந்த உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, கொலை செய்த பாவின் தந்தை ஜோகிந்தர் சிங் கூறுகையில், ‛‛எனது பேத்தி வியாழக்கிழமை மதியம் வீட்டுக்கு வந்தார். எனது மகன் பாவ் கோபத்தில் அவரை தாக்கி கூரிய ஆயுதத்தால் கொலை செய்துவிட்டார். தடுத்த எங்களை அறையில் வைத்து பூட்டி விட்டதோடு கொலை மிரட்டலும் விடுத்தார். அதன்பிறகு என் பேத்தியின் உடலை இங்கிருந்து எடுத்து சென்றார்'' என அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
இதுபற்றிய புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தால்பீர் சிங் என்ற பாவை அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே மகளை கொன்று உடலை பைக்கில் கட்டி இழுத்து சென்றது தொடர்பான காட்சி அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications