திடீர் பரபரப்பு! பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா.. என்ன காரணம்.. வெளியான முக்கிய தகவல்
சண்டிகர்: பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் பல மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் மாநில முதல்வர்களுக்கும் ஒத்துப்போவது இல்லை. அப்படி ஆளுநர் அரசு இடையே மோதல் நிலவும் மாநிலங்களில் ஒன்று பஞ்சாப்.

ராஜினாமா: இந்த பஞ்சாப் மாநிலத்திற்கு ஆளுநராக இருப்பவர் பன்வாரிலால் புரோஹித். இவர் இப்போது திடீரென தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் ஆளுநர் மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகர் நிர்வாகி என இரண்டு பதவியில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகத் தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது தொடர்பாகப் பஞ்சாப் அரசுக்கும் ஆளுநருக்கும் கடும் மோதல் நிலவி வந்த நிலையில், திடீர் அறிவிப்பு வந்துள்ளது. இந்த பன்வாரிலால் புரோஹித் இதற்கு முன்பு தமிழ்நாடு, அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 முதல் 2021 வரை தமிழ்நாடு ஆளுநராக இருந்த போது, இவர் பல சர்ச்சைகளில் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றம்: பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஐந்து மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது தொடர்பாகப் பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கைத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டை கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செயல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்றம் சில காட்டமான கருத்துகளைக் கூறியிருந்தது.
"நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்," என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. மேலும், ஒரு கவர்னர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவைக் காலவரையின்றி நிலுவையில் வைக்க முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது. ஒரு ஆளுநரால் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்ட மசோதாக்கள் நிறைவேற்றுவதைத் தடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
வார்த்தை போர்: அதேபோல கடந்த காலங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதல்வர் அம்மாநில முதல்வர் பகவந்த் மான் இடையே மோதல் போக்கே நிலவி வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல்வர் பகவந்த் மானுக்கு பரபர கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் தனது கடிதங்களுக்குப் பஞ்சாப் பதிலளிக்கவில்லை என்றால் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரைக்கப் போவதாக எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அவர் மீண்டும் இதே பிரச்சினையை எழுப்பியிருந்தார். தனது கடிதங்களுக்குப் பஞ்சாப் அரசு பதிலளிப்பதில்லை என்று கூறிய அவர், பஞ்சாப் அரசு இயந்திரம் தோல்வி அடைந்துவிட்டதாகக் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பு நேரிடம் என்று எச்சரித்தார். இதற்குப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கடுமையான பதிலடியைக் கொடுத்திருந்தார். பஞ்சாபில் உள்ள அமைதியை விரும்பும் மக்களை கவர்னர் அச்சுறுத்தினார் என்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்தச் சூழலில் தான் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். தொடர்ந்து இப்போது பதவி விலகுவதாகவும் பன்வாரிலால் புரோஹித் கடிதம் எழுதியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications