அடேங்கப்பா! பஞ்சாபில் ஆம் ஆத்மியிடம் காங். பறிகொடுத்த இடங்கள் இத்தனையா? அகாலி தளம் பரிதாபம்!
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அகாலி தளம் கட்சிகளின் வசம் இருந்த தொகுதிகளில் ஆம் ஆத்மி இந்த முறை மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த பிப். 20ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மொத்தம் 71.95% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 117 இடங்கள் உள்ள நிலையில், அதில் ஒரு கட்சி ஆட்சியை அமைக்கக் குறைந்தது 59 இடங்களில் வெல்ல வேண்டும். இங்குக் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

ஆம் ஆத்மி
பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகளில் ஆம் ஆத்மி கட்சியே பஞ்சாபில் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டது. அதேபோல இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பல தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியே முன்னிலையில் உள்ளது. தற்போதைய சூழலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியாகத் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ் வெறும் 18 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. அதேபோல முக்கிய பிராந்திய கட்சியான அகாலி தளம் 4 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

ஆம் ஆத்மிக்கு பெரிய வெற்றி
கடந்த 2017 தேர்தலில் 20 இடங்களில் மட்டுமே வென்ற ஆம் ஆத்மி இந்த முறை 92 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. அதாவது கூடுதலாக 72 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. கடந்த தேர்தலில் வென்ற 20 இடங்களில் 18 இடங்களை மீண்டும் கைப்பற்றி உள்ளது. கைவசம் இருந்த தொகுதிகளில் இரண்டில் மட்டுமே ஆம் ஆத்மி கட்சியால் வெல்ல முடியவில்லை. அதில் ஒரு தொகுதியில் காங்கிரசும் மற்றொன்றில் இதர கட்சியும் முன்னிலையில் உள்ளது.

காங். & அகாலி தளம் படுதோல்வி
கடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்று இருந்த 77இல் 66 தொகுதிகளில் இந்த முறை அக்கட்சி தோல்வியைத் தழுவி உள்ளது. அதில் சுமார் 62 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வென்றுள்ளது. அதேபோல அகாலி தளம் கடந்த முறை வென்று இருந்த 15 தொகுதிகளில் 13 இழந்துள்ளது. குறிப்பாக அதில் 10 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் மற்றும் அகாலி தளம் கட்சிகளில் இருந்து மட்டும் ஆம் ஆத்மி இந்த முறை 72 இடங்களைத் தன்வசப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

டெல்லிக்கு வெளியே
இந்தத் தேர்தல் வெற்றி மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. டெல்லி கட்சி என்றே அடையாளப்படுத்தப்பட்ட ஆம் ஆத்மி, கடந்த காலங்களில் தலைநகருக்கு வெளியே வளர முயன்ற போது அது பலன் அளிக்கவில்லை. ஆனால், இப்போது முதல்முறையாக பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்துள்ளது. டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் அங்கு மத்திய அரசுடன் பனிப்போரை ஆம் ஆத்மி நடத்த வேண்டி இருந்தது.. இப்போது முதல்முறையாக மாநில அந்தஸ்து கொண்ட மாநிலத்தை ஆம் ஆத்மி கைப்பற்றி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications