மன உளைச்சலோடு சாகிறேன் - வாட்ஸ்அப்பில் வீடியோ போட்டு தூக்கில் தொங்கிய சின்னராஜா
இந்த ஆட்சியில் எதுவும் நடக்காது மன உளைச்சலோடு சாகிறேன் என்று கூறிவிட்டு பேரூரில் ரியல் எஸ்டேட் ஓனர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருக்கிறது. மன உளைச்சலோடு மரணமடைகிறேன் என்று வீடியோவில் பேசிவிட்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டமே அவரது தற்கொலைக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
உயிரை மாய்த்துக்கொண்ட நபரின் பெயர் சின்னராஜா என்பதாகும். போரூர் வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வந்தார். அவருக்கு ரீட்டா என்ற மனைவியும், மகளும் உள்ளனர். இரு தினங்களுக்கு முன்னதாக சின்னராசு தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சின்னராசுவின் மரணம் குறித்து மதுரவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து சின்னராசுவின் சடலத்தை மீட்டனர். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தவே, சின்னராசு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினர்.
தற்கொலைக்கு முன்னதாக சின்னராசு வீடியோ எடுத்துள்ளார். அதில் தனது தற்கொலைக்கான காரணத்தை கூறியுள்ளார்-
இடங்களுக்கு பஞ்சாயத்து அப்ரூவல் தடை செய்யப்பட்டதை அடுத்து என் வாழ்க்கை வீணாகிவிட்டது. என்னைப்போன்ற ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களின் லைப் வீணாகிவிட்டது என்று கூறியுள்ளார். வட்டிக்கு மேல் வட்டிக்கு பணம் வாங்கி போட்டும் நஷ்டத்திற்கு மேல் நஷ்டம்தான். தினம் தினம் போராட்டம்தான். அப்ரூவல் வாங்க சென்றால் ஆளுங்கட்சியினர் பெயரை சொல்லி பணம் கேட்கிறார்கள்.
ரியல் எஸ்டேட் தொழிலை ஒழித்து கட்டி விட்டார்கள் யாருக்கும் பதில் சொல்ல முடியவில்லை. படுத்தால் தூக்கம் வருவதில்லை மனதில் நிம்மதியில்லை. மன உளைச்சலோடு சாகலாம் என்று முடிவு செய்துள்ளேன். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.
ரியல் எஸ்டேட் தொழில் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதே என் ஆசை என்ற அந்த வீடியோவில் கூறியுள்ளார். குடும்பத்தை விட்டு செல்கிறேன் என்ற கண்டம் மனதிற்குள் இருந்தாலும் இதற்கு மேல் உயிர் வாழ்ந்தால் தினம் தினம் செத்து பிழைக்கவேண்டும் என்றும் தனது தற்கொலைக்கு முந்தைய வீடியோவில் கூறியுள்ளார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications