இந்தியாவெங்கும் ‘திராவிட மாடல்’..பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை.. ஹரியானாவில் ஆம் ஆத்மி உறுதி!
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை என திமுக பாணியில் மக்கள் நலத்திட்டங்களை அறிவித்திருக்கிறது. இந்த தேர்தலில் 90 தொகுதிகளிலும் ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்து போட்டியிடுகின்றன.
ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக 40 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. அதேபோல மறுபுறம் காங்கிரஸ், 31 தொகுதிகளை கைப்பற்றியிருந்தது. இந்நிலையில், இந்த தேர்தலில் ஆம் ஆத்மி 90 தொகுதிகளிலும் தனியாக களமிறங்கியுள்ளது. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ்+ஆம் ஆத்மி களமிறங்கிய நிலையில், இந்த தேர்தலில் தனித்து களம் காண்கின்றன.

இன்று ஹரியானாவின் பஞ்ச்குலாவில், ஆம் ஆத்மி கட்சியின் 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் வெளியிட்டிருந்தார். அனைவருக்கும் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை, கல்வி மற்றும் சுகாதாரம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என 5 வாக்குறுதிகளை ஆம் ஆத்மி அறிவித்திருக்கிறது.
இந்த நிகழ்வில் பேசிய சுனிதா கெஜ்ரிவால், "அரவிந்த் கெஜ்ரிவால் ஹரியானா மாநிலம் ஹிசாரில் வளர்ந்தவர். அரவிந்த் கெஜ்ரிவால் இந்த சிறுவன் நாட்டின் தலைநகரை ஆள்வான் என்று அப்போது யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். இது சாதாரண விஷயமல்ல. எனவே அவரை அடையாளம் கண்டுக்கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார். இந்த நிகழ்வில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
சமீபத்தில் ஹரியானாவில் ஏராளமான குழப்பங்கள் எழுந்திருந்தன. குறிப்பாக பாஜக ஆட்சி இடையில் கவிழ்ந்து, மீண்டும் உயிர்பெற்று வந்தது.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தள் மற்றும் ஹரியானா லோக்கித்ட் கட்சி தலா ஒரு இடங்களில் வென்றிருந்தது. அதேபோல, சுயேட்சை வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் வென்றிருக்கின்றனர்.
பெரும்பான்மைக்கு 46 தொகுதிகள் தேவை. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஜனநாயக ஜனதா கட்சியுடன்(ஜேஜேபி) கூட்டணி வைத்து பாஜக ஆட்சியை பிடித்தது. இதற்காக கூட்டணி கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதலமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், ஜேஜேபி தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. எனவே கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் கட்டார் உட்பட அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
ஆனால், அதே மாதத்தில் சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்த முறை முதல்வர் பொறுப்பு கட்டாரிடமிருந்து நயாப் சிங் சைனியின் கைக்கு மாறியது. நயாப் சிங் ஓபிசி சமூகத்தை சேர்ந்தவராவார்.
என்னதான் பாஜக இங்கு கொஞ்சம் வீக்காக இருந்தாலும், காங்கிரஸ் நல்ல பலத்தோடு இருக்கிறது. எனவே, இதனை எதிர்த்து ஆம் ஆத்மி எப்படி களமாட போகிறது என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications