சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பஞ்சாப் தேர்தலை தள்ளி வைங்க.. வலுக்கும் குரல்கள்.. பாஜகவுடன் கரம் கோர்த்த அம்ரீந்தரின் கட்சி

Google Oneindia Tamil News

சண்டிகர்: குரு ரவிதாஸ் பிறந்தநாளை ஒட்டி பஞ்சாப் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு பஞ்சாப் மாநில பாஜக கடிதம் எழுதியுள்ள நிலையில் கேப்டன் சிங்கின் லோக் பஞ்சாப் காங்கிரசும் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டசபையின் பதவி காலம் நிறைவடைந்த பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பிக் பாஸ் தமிழ் 5: பிரியங்காவுக்காக கமல் கொடுத்த கிப்ட்.. விளக்கம் வேற லெவல் பிக் பாஸ் தமிழ் 5: பிரியங்காவுக்காக கமல் கொடுத்த கிப்ட்.. விளக்கம் வேற லெவல்

மொத்தம் 117 சட்டமன்ற தொகுதிகள் உள்ள பஞ்சாப் சட்ட சபைக்கான தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 14ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ஆம் தேதியும் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார்.

பஞ்சாப் தேர்தல்

பஞ்சாப் தேர்தல்

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் பாஜக சிரோமணி அகாலிதளம் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்து கேப்டன் அமெரிக்கா சிங்கின் லோக் பஞ்சப் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் களம் காண்கின்றன. இந்த நிலையில் வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 14ஆம் தேதி அடுத்த இரு நாட்களில் அதாவது பிப்ரவரி 16ஆம் தேதி குரு ரவிதாஸ் இன் பிறந்தநாள் வருகிறது. அவரை பின்பற்றும் லட்சக்கணக்கான மக்கள் அவருக்கு மரியாதை செலுத்த புனித யாத்திரையை மேற் கொள்வார்கள் என்பதால் வாக்களிக்கும் நிகழ்வில் பங்கேற்க முடியாது எனவும் எனவே தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

தேர்தலை தள்ளி வைக்க கோரிக்கை

தேர்தலை தள்ளி வைக்க கோரிக்கை

இது குறித்து பஞ்சாப் பாஜக பொதுச்செயலாளர் சுபாஷ் வர்மா தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் குரு ரவிதாஸின் பிறந்தநாள் பிப்ரவரி 16 ஆம் தேதி அன்று வருகிறது எனவும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட ஏராளமானோர் அவரை பின்பற்றுகிறவர்கள் , வாரணாசிக்கு புனித யாத்திரை மேற்கொள்ள இருப்பதால் வாக்களிக்கும் நிகழ்வில் பங்கேற்க முடியாது எனவும் எனவே தேர்தலை தள்ளி வைக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே பஞ்சாப் முதல்வர் சரப்ஜித் சிங் சனி குரு ரவிதாஸ் ஜெயந்தி காக சட்டசபை தேர்தலை 6 நாட்களுக்கு ஒத்தி வைக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியதை அடுத்து பாஜக பஞ்சாப் மாநில தலைமையும் அதே கோரிக்கையை எழுப்பியுள்ளது.

பஞ்சாபில் வலுக்கும் கோரிக்கை

பஞ்சாபில் வலுக்கும் கோரிக்கை

இதே கோரிக்கையுடன் பாஜக கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் ( சன்யுக்த்) தலைவர் சுக்தேவ் சிங் திண்ட்சா தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில் வாக்குப்பதிவு தேதியை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரியிருந்த நிலையில், இது தவிர கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான பஞ்சாப் லோக் காங்கிரஸும் குரு ரவிதாஸ் ஜெயந்தியைக் கருத்தில் கொண்டு தேர்தலை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்துள்ளது. குரு ரவிதாஸ் ஜெயந்திக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக தேர்தல் நடைபெற உள்ளதால், வருடாந்திர யாத்திரைக்காக பனாரஸ் செல்வதால் பல வாக்காளர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கமல் சைனி தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

பஞ்சாப் தேர்தல்களுக்கான தேதிகளை தேர்தல் கண்காணிப்புக்குழு மறுஅட்டவணை செய்வது கடினமாக இருக்காது என்றும் பஞ்சாபில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கோரிக்கையும் இதுவே என்றும், தேர்தலை தாமதப்படுத்துவதில் தேர்தல் கமிஷனுக்கு எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது என்றும் கமல் சைனி கூறியுள்ளார். சனிக்கிழமையன்று, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு எழுதிய கடிதத்தில், இது மாநிலத்தின் மக்கள்தொகையில் சுமார் 32 சதவீத பங்களிக்கும் பட்டியல் சாதி சமூகத்தின் சில பிரதிநிதிகளால் தனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது எனவும், குரு ரவிதாஸின் பிறந்த நாள் சந்தர்ப்பத்தில் மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பிப்ரவரி 10 முதல் 16 வரை உத்தரபிரதேசத்தில் உள்ள பனாரஸுக்கு வருகை தருவார்கள் என்றும் எனவே தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என முதல்வர் சான்னி கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

English summary
Punjab state BJP has written a letter to the Chief Election Commissioner asking him to postpone the Punjab elections on the occasion of Guru Ravidas' birthday. Captain Amrinder Singh's Lok Punjab Congress has also demanded that the polls be postponed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X