"ஹரியானா வன்முறைக்கு பின்னணியில் பெரும் சதி" சந்தேகம் கிளப்பும் முதல்வர் மனோகர் லால் கட்டார்!
சண்டிகர்: ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் பேரணியின் போது மற்றொரு தரப்பினருடன் மோதல் ஏற்பட்டு பெரும் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறைக்கு பின்னணியில் பெரும் சதி இருப்பது போல தெரிவதாக அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் துவக்கத்தில் மெய்தி - குக்கி இன மக்களிடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் மணிப்பூர் மாநிலத்தையே வன்முறைக்காடாக மாற்றி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இன்னும் கூட அங்கு இயல்பு நிலை திரும்பாமல்தான் உள்ளது. இந்த வேதனைக்கு பாஜக ஆட்சி நடைபெற்று வரும் ஹரியானாவில் நேற்று இரு பிரிவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.

அதாவது, ஹரியானாவில் நூ மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் பேரணி நேற்று நடைபெற்றது. இந்த பேரணியில் அந்த அமைப்பினர் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த பேரணி குருகிராம் - அல்வார் தேசிய நெடுஞ்சாலை அருகே வந்த போது வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் அடங்கிய குழு ஒன்று பேரணியை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்ந்து வன்முறையாக மாறியது. கல்வீசி தாக்கிக் கொண்டதோடு வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. இதனால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 5 பேர் பலியாகியுள்ளனர். போலீசார் உள்பட 7-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஹரியானாவில் ஏற்பட்ட இந்த மோதலால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், அப்பகுதியில் 144 - தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
மொபைல் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில், இந்த வன்முறை சம்பவத்தால் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த வன்முறைக்கு பின்னணியில் பெரும் சதி இருப்பதாக அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் சந்தேகம் கிளப்பியுள்ளார். இது தொடர்பாக மனோகர் லால் கட்டார் கூறுகையில், நூ மாவட்டத்தில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. பல இடங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த வன்முறைகளுக்கு பின்னால் பெரும் சதி இருப்பது போல தெரிகிறது. யாத்திரையாக வந்தவர்கள் மீதும் போலீசார் மீது தாக்குதல் நடத்த சிலர் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். நூ மற்றும் அருகாமையில் உள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவும் போடப்பட்ட்டுள்ளது. இதுவரை 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 70 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications