கொன்னுடுங்க, 4 உசுரு சார்.. தண்டனை தந்துடுங்க.. ஹரியானா "பியூட்டி" பண்ண வேலை.. காட்டி தந்த ஈரத்துணி
சண்டிகர்: அழகு ஆபத்து என்பதன் உண்மை அர்த்தம் இதுதான் போல.. ஒரு சைக்கோ பெண்ணால் ஹரியானா மாநிலமே கதி கலங்கி போய் கிடக்கிறது.. பெண்ணின் மண்டைக்கேறிய பொறாமை உணர்ச்சி, அது கொலை வரை செல்லுமா? என்று அம்மாநில மக்கள் உறைந்து போய் உள்ளனர்.. இந்த ஹரியானா பெண் கைதான நிலையில், அதிர்ச்சி வாக்குமூலம் ஒன்றை போலீசில் தற்போது தந்துள்ளாராம்.
அரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ள நவுலதா என்ற கிராமத்தில், ஒரு வீட்டில் திருமண விழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது உறவினர்கள் பலரும் கூடியிருக்க, குழந்தைகளின் விளையாட்டு சத்தம் காதை கிழித்தது.

சிறுமி பரிதாபம்
அப்படி விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுமியை காணவில்லை என்றதும் திருமண வீடே கதிகலங்கியது.. உடனே வீடு முழுக்க குழந்தையை தேடினார்கள்.. மாடியில் ஒரு ரூமில், மூலையில் வைக்கப்பட்டிருந்த நீர் நிறைந்த பக்கெட் மீது பலரது கவனம் குவிந்தது.. உடனே அதனுள் எட்டிப்பார்த்தபோது, சிறுமியின் தலை பக்கெட்டுக்குள் மூழ்கி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே சிறுமியை மருத்துவமனைக்கு தூக்கி சென்றும், அந்த பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்துவிட்டனர். பிறகு சிறுமியின் தாத்தா பால் சிங் போலீசில் புகார் தந்ததையடுத்து, விசாரணை ஆரம்பமானது..
பூனம் - பியூட்டி
திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா போலீசார் ஆய்வு செய்தபோது, சிறுமி கடைசியாக ஒரு பெண்ணுடன் மாடிப்படிக்கட்டில் ஏறி சென்றது பதிவாகியிருந்தது.. அந்த பெண்ணின் பெயர் 34 வயதுடைய பூனம்.. இவர் சிறுமியின் அத்தை என்பது தெரியவந்தது. உடனே பூனத்திடம் விசாரணை நடந்தது.
அப்போது அதிர்ச்சி வாக்குமூலத்தை பூனம் போலீசாரிடம் சொல்லி உள்ளார்.. "ஆமாம், நான்தான் சிறுமியை கொன்றேன்.. காரணம், எனக்கு அவள் மீது பொறாமை.. எப்போதுமே எனக்கு என்னைவிட வேறு யாரும் அழகாக இருக்கக் கூடாது. அந்த பெண் சிரித்து விளையாடியபோது அழகாக இருந்தாள்.. நம்ம குடும்பத்தில் இப்படியொரு அழகான பெண்ணா? என்று கடுப்பாகி கொன்றுவிட முடிவு செய்தேன்.
பக்கெட் தண்ணீர்
அந்த சிறுமியை, பேச்சு தந்து மாடிக்கு அழைத்து சென்று, பக்கெட்டில் தண்ணீர் கொண்டு வர சொன்னேன்.. சிறுமியும் பக்கெட்டில் தண்ணீர் எடுத்து வந்தாள்.. உடனே சிறுமியின் தலையை அழுத்தி அமுக்கி கொன்றுவிட்டேன்.. இந்த சிறுமியை மட்டுமல்ல, ஏற்கனவே 3 குழந்தைகளை கொன்றுள்ளேன்.
2019-ல் திருமணமாகி இங்கே வந்தேன்.. 2023ல் என்னுடைய மைத்துனியின் 9 வயது மகள் இஷிகா பார்க்க அழகாக இருந்தாள்.. உடனே அவளையும் இப்படித்தான் பக்கெட்டில் மூழ்கடித்து கொன்றேன். இதை என்னுடைய 3 வயது சுபத் பார்த்து விட்டான்.
ஈரத்துணியால் அம்பலம்
இதை வெளியில் போய் சொல்லி விடுவானோ என்ற அச்சத்திலும், தன் மீது யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும்,. என்னுடைய சொந்த மகனான 3 வயது சுபத்தையும் அதே பாணியில் தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்றேன்.
கடந்த ஆகஸ்ட் மாதம் உறவினர் திருமணம் நடந்தது.. அந்த விழாவில், சொந்தக்காரரின் 6 வயது மகள் ஜியாவை கொலை செய்தேன்..
இப்போது கடந்த 1ம் தேதி மற்றொரு திருமணத்தில் என் அண்ணனின் 6 வயது மகள் வித்தியை, அதேபோல பிளாஸ்டிக் பக்கெட் நீரில் மூழ்கடித்து கொன்றேன்.. ஆனால் இந்த முறை என்னுடைய ஆடைகள் ஈரமாக இருந்ததால், அதை பார்த்த உறவினர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. அதற்கு பிறகுதான், போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது" என்று பூனம் பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார்.
கொன்னுடுங்க, தண்டனை தந்துடுங்க சார்
இது குறித்து போலீசார் சொல்லும்போது, 'தன்னைவிட அல்லது தனது குடும்பத்தைவிட மற்ற குழந்தைகள் அழகாக இருப்பதை பூனாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அந்த குழந்தைகளைக் கொல்ல வேண்டும் என்ற மனநோயாளியைப் போல அவர் செயல்பட்டுள்ளார்.. தன்னுடைய சொந்த மகன் என்றும் பாராமல், 4 பிஞ்சு உயிர்களைப் பறித்த இந்த பெண்ணுக்கு கடுமையான தண்டனையை தந்துவிடுங்கள் என்று உறவினர்களே கோரிக்கை விடுத்துள்ளனர்" என்றனர்.












Click it and Unblock the Notifications