மணமகளை வரவேற்க.. கட்டுக்கட்டாக வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள்.. மொத்தம் ரூ.8.50 கோடியா? வீடியோ
சண்டிகர்: பஞ்சாப்பில் நடந்த திருமணத்தின்போது மணமகன் ரூ.8.50 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை எடுத்து மணப்பெண்ணின் மீது வீசி வரவேற்றதாக இணையதளங்களில் வீடியோ பரவி வருகிறது. இதனை பார்த்து அனைவரும் வியப்படைந்துள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில் அதுபற்றி மணமகனின் குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் திருமணம் என்பது மாறுபடும். திருமணத்தின்போது மணமகன், மணமகள் தரப்பில் பின்பற்றப்படும் சம்பிரதாயங்கள் கிராமத்துக்கு கிராமம் வேறுபடுகிறது. அந்த வகையில் பஞ்சாப்பில் திருமணத்தின்போது மணமகள் மீது பணநோட்டுகளை வீசி வரவேற்பது நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் தான் தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. பணமழை பெய்வது போல் மணமகள் மீது மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசுகின்றனர்.

அதாவது மணமகள் திருமண நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் மையப்பகுதியில் நிற்கிறார். அவர் அருகே மணமகன் நிற்கிறார். அவர் தான் வைத்திருக்கும் பேக்கில் இருக்கும் பணத்தை எடுத்து மணமகள் மீது வீசுகிறார். இந்த நோட்டுகள் மழை போல் மேலிருந்து கீழாக மணமகள் மீது விழுகிறது. அதேபோல் மணமகனின் குடும்பத்தினரும் சுற்றி நின்று பணத்தை அள்ளி மணமகள் மீது வீசுகின்றனர். மணமகள் நிற்கும் இடத்தை சுற்றிய தரை முழுவதும் ரூபாய் நோட்டுகள் நிரம்பி உள்ளன.
இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது பிப்ரவரி 14ல் பஞ்சாபின் தர்ன் தாரனில் நடந்த ஒரு திருமணத்தில், மணப்பெண் மீது ரூ.8.5 கோடி ரூபாய் நோட்டுகளை தூவி மணமகன் வரவேற்றதாக தகவல்கள் பரவி வருகிறது.
இதனை பார்க்கும் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். ஒரு தரப்பினர் புகழ்ந்து தள்ளும் நிலையில் இன்னொரு தரப்போ இது ஆடம்பரம்.. தேவையில்லாத செலவு. இதுபற்றி வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று விமர்சனம் செய்து வருகின்றனர். இருப்பினும் இந்த வீடியோ தொடர்ந்து பரவி வருகிறது.
இதற்கிடையே தான் இந்த சம்பவம் பற்றி மணமகனின் சகோதரர் சகோதரர் சிக்கந்தர் சிங் விளக்கம் அளித்துள்ளார். திருமணத்தில் ரூ.8.50 கோடி மதிப்பிலான பணம் வீசப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். இதுபற்றி சிக்கந்தர் சிங்கூறுகையில், ‛‛திருமண விழாவில் மணமகள் மீது பணம் வீசியது உண்மை தான். ஆனால் அந்த தொகை மிகைப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் தான் மணப்பெண் மீது வீசப்பட்டது. என் சகோதரர் ஆஸ்திரேலியாவில் லாரி தொழில் செய்து வருகிறார்'' என்றார்.
அதேபோல் திருமண நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மேலாளர் கூறுகையில், ‛‛விழாவில் ரூ.8.50 கோடி பயன்படுத்தப்படவில்லை. டாலர் நோட்டுகளையும் சேர்த்து மொத்தம் சுமார் 4 லட்சம் ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் என பரவும் தகவல் பொய்யானது'' என்றார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications