"தற்கொலை படை தாக்குதல்.. சீக்ரெட் ஊர்வலம்.." பஞ்சாபை அலறவிட்ட அம்ரித்பால் சிங்.. 5 பாயிண்ட்ஸ்
சண்டிகர்: பஞ்சாபின் அம்ரித்பால் சிங் ஒரு மாத கால தேடுதல் வேட்டைக்குப் பின்னர், இன்று காலை சரணடைந்துள்ளார். இத்தனை காலம் பஞ்சாப் போலீசாரிடம் சிக்காமல் இருந்த அம்ரித்பால் சிங் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தைத் தனி நாடாகப் பிரிக்க வேண்டும் என்றும் காலிஸ்தான் என்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சில பிரிவினைவாதிகள் போராடி வருகின்றனர். இதற்காக அவர்கள் ஆயுத போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
நமது நாட்டில் பல காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுக்குத் தடை இல்லை. இதனால் அங்கிருந்து இவர்களுக்கு நிதியுதவியும் கிடைக்கிறது.

காலிஸ்தான்: இந்தியாவில் இருக்கும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் பல்வேறு அமைப்புகளை நடத்தி வருகின்றனர். அதன்படி பஞ்சாபில் இயங்கி வரும் 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பின் தலைவராக உள்ளவர் தான் அம்ரித் பால் சிங்..! கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இவரது உதவியாளர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டவர் தான் இவர், இது அப்போதே அங்கு பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
இருப்பினும் அப்போது பதற்றம் ஏற்பட வேண்டாம் என்று அம்ரித் பால் சிங் உதவியாளர் விடுவிக்கப்பட்டார். இருப்பினும், அதன் பின்னர் அம்ரித் பால் சிங் போலீஸ் கண்காணிப்பில் வந்தார். போலீசார் அவரது இருப்பிடங்களைத் தொடர்ந்து டிராக் செய்து வந்தனர். இந்தச் சூழலில் தான் கடந்த மாதம் அவரை கைது செய்ய மிகப் பெரிய ஆப்ரேஷனை நடத்தினர். அப்போது அவரது கூட்டாளிகள் 78 பேரை போலீசார் கைது செய்தனர்.. இருப்பினும், அப்போது அம்ரித் பால் சிங்கை கைது செய்ய முடியவில்லை.

தலைமறைவாகக் கைது: சுமார் ஒரு மாதமாக அவர் தலைமறைவாக இருந்த நிலையில், இன்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சுமார் ஒரு மாதம் நடந்த ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடிந்துள்ளது. என்றே சொல்லலாம். போலீசாரிடம் சிக்காமல் இருந்த இந்த அம்ரித் பால் சிங் குறித்த 5 முக்கிய பாயிண்ட்களை பார்க்கலாம்.
காலிஸ்தானி பாகிஸ்தான் ஏஜென்ட் என்றே பஞ்சாப் அரசு அம்ரித் பால் சிங்கை விவரிக்கிறது.. இவர் கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் பஞ்சாப் போலீசாரிடம் இருந்து தலைமறைவாக உள்ளார்.. ஜலந்தர் மாவட்டத்தில் இருந்த அவர் கார், பைக் என ஒவ்வொரு வாகனமாக மாறி தப்பியோடினார். அதேபோல, போலீசாரிடம் இருந்து சிக்காமல் இருக்க இவர் தனது தோற்றத்தையும் தொடர்ச்சியாக மாற்றிக் கொண்டே வந்தார்

பிந்திரன்வாலே 2.0: முன்பே சொன்னது போலக் கடந்த பிப். மாதம் உதவியாளர் கைது செய்யப்பட்ட போது போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட போதுதான், அவர் பஞ்சாப் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தினார். இவரது பாலோயர்ஸ்கள் இவரை காலிஸ்தானி பிரிவினைவாதி மற்றும் பயங்கரவாதியான ஜர்னைல் சிங் பிந்திரன்வாலேவின் சீடர் என்று கூறுகிறனர். மேலும், அவரது ஆதரவாளர்கள் பலரும் அம்ரித் பால் சிங்கை "பிந்திரன்வாலே 2.0" என்றே அழைக்கிறார்கள்.
தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்த மாநிலம் முழுக்க சென்று இளைஞர்களை இழுக்க இவர் ரகசிய ஊர்வலத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், இவர் போதை ஒழிப்பு மையங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக ஆயுதங்களைக் குவித்து வந்ததாகவும் உளவுத் துறையிடம் இருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கி கலாசாரம்: பஞ்சாப் இளைஞர்களைத் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு வழிநடத்தி வருவதாகவும், பஞ்சாபை வகுப்புவாத அடிப்படையில் பிரிக்க முயல்வதாகவும் அம்ரித்பால் சிங் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இதன் காரணமாகவே கடந்த மார்ச் 2ஆம் தேதி பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் திட்டம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தியதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் தலைமறைவாகும் முன், அம்ரித்பால் சிங் தனது போராளிகளுடன் சுற்றித் திரிந்தார்.. அவர்கள் அனைவரும் ஆயுதங்களுடன். அம்ரித்பால் இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட வெளிநாட்டு வாழ் இந்தியரான கிரண்தீப் கவுர் என்பவை திருமணம் செய்து கொண்டார். கிரண்தீப் கவுர் இந்த வாரம் பிரிட்டன் செல்லவிருந்த நிலையில், அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அம்ரித்பால் 2012 முதல் துபாயில் தங்கியிருந்தார். அங்கே டிராவில் நிறுவனம் ஒன்றில் வேலை செய்தார். 2021இல் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தின் போது அவர் இந்தியாவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications