பாஜகவுக்கு அதிர்ச்சி.. ஹரியானாவில் ஆரம்பித்த நம்பர் கேம்.. அமித்ஷா போடும் பிளான் பி.. கை கொடுக்குமா!
சண்டிகர்: லோக்சபா தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னால் ஹரியானா பாஜக அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அதைச் சமாளிக்க பாஜக புது பிளானை கையில் எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் பாஜக மற்றும் ஜேஜேபி ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்து இருந்தது. லோக்சபா தேர்தலுக்கு சில காலம் மட்டுமே இருக்கும் நிலையில், இந்தக் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

இதனால் அம்மாநில பாஜக முதலமைச்சர் மனோகர் லார் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அங்கே ஆட்சியைக் காப்பாற்ற பாஜக வைத்துள்ள பிளான் என்ன.. அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பார்க்கலாம்.
ராஜினாமா: ஹரியானா மாநிலத்தில் பாஜக மற்றும் ஜேஜேபி கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. கடந்த 4 ஆண்டுகளாக இந்தக் கூட்டணியில் எந்தவொரு குழப்பமும் இல்லாமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில், ஜேஜேபி கட்சி பாஜகவுக்கு வழங்கிய ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவம் பேசுபொருள் ஆகியுள்ளது. இதனால் மனோகர் லார் கட்டார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
என்ன காரணம்: லோக்சபா தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாமல் போனதே இந்த கூட்டணி கவிழ முக்கிய காரணமாகும். ஹரியானாவில் உள்ள ஹிசார் மற்றும் பிவானி-மகேந்திரகர் ஆகிய 2 இடங்களில் ஜேஜேபி போட்டியிட விரும்பியது. ஆனால், பாஜக எந்தவொரு சீட்டையும் ஜேஜேபிக்கு தர தயாராக இல்லை. இந்தாண்டு இறுதியில் நடக்கும் சட்டசபைத் தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என்பதே அவர்கள் நிலைப்பாடு. ஏனென்றால் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தனித்துக் களமிறங்கிய பாஜக அங்குள்ள அனைத்து 10 இடங்களிலும் வென்றிருந்தது.
இருப்பினும், லோக்சபாவில் 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் ஜேஜேபி உறுதியாக இருந்தது. அப்படி பாஜக உடன்படவில்லை என்றால் தனித்துக் களமிறங்கவும் ஜேஜேபி ரெடியாக உள்ளதாக அக்கட்சித் தலைவர்கள் அறிவித்தனர். இருப்பினும், பாஜக இறங்கி வராததால் நிலையில், இப்போது ஜேஜேபி தனது ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டுள்ளது. இருப்பினும், இதனால் அங்குள்ள பாஜக அரசு கவிழ வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.
இதற்கிடையே அங்கு ஏற்பட்டுள்ள சூழலை சமாளிக்க டெல்லி பாஜக தலைமை மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா மற்றும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் ஆகியோரை ஹரியானாவுக்கு அனுப்பி உள்ளது.
பிளான் பி: ஹரியானாவில் மொத்தம் 90 சீட்கள் இருக்கும் நிலையில், பாஜக (41) ஜேஜேபி (10) இணைந்து ஆட்சி நடந்து வந்தன. இப்போது ஜேஜேபி ஆதரவை விலகிக்கொண்ட நிலையில், பாஜக எண்ணிக்கை 41ஆகக் குறையும். இது பெரும்பான்மைக்குத் தேவையான 46ஐ விடக் குறைவு.. இருப்பினும், அங்கே உள்ள சுயேச்சை எம்எல்ஏக்களில் குறைந்தது 5 பேர் பாஜகவுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளனர். மேலும், ஒரு எம்எல்ஏவை கொண்ட ஹரியானா லோகித் கட்சியும் பாஜக ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளது.
இந்த இரண்டையும் சேர்த்தாலே பாஜக பெரும்பான்மைக்குத் தேவையான 46 இடங்களைத் தாண்டி பெறும். இதனால் பாஜக ஆட்சிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. அதேநேரம் மனோகர் லார் கட்டார் முதல்வராகத் தொடர்வாரா இல்லையா என்பதில் சஸ்பென்ஸ் தொடரவே செய்கிறது. ஏனென்றால் அவர் அங்குள்ள கர்னல் தொகுதியில் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு வேலை கர்னல் தொகுதியில் கட்டார் போட்டியிட்டால் ஹரியானாவுக்கு புதிய முதல்வர் தேர்வாக வாய்ப்புகள் மிக அதிகம்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications