விடுதலை பட பாணியில்.. போலீஸ் ஸ்டேஷன் உள்ளே.. புகுந்து அட்டாக்.. யார் இந்த அம்ரித்பால் சிங்?
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவரும் பிரிவினைவாதியுமான அம்ரித்பால் சிங் இன்று போலீசாரிடம் சரணடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தற்போது அவர் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்கிற விவரங்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் முதல் பஞ்சாப் தனி நாடாக வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து எழுந்துக்கொண்டிருந்தது. ஆனால் பெரும்பாலான மக்கள் இதனை விரும்பாததால் பஞ்சாப் தற்போது வரை இந்தியாவின் ஒரு பகுதியாக நீடித்து வருகிறது. இப்படி இருக்கையில் மீண்டும் தனி நாடு கோரிக்கையை அம்மாநிலத்தில் சிலர் தீவிரமாக முன்வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வைத்து தீவிரமாக இயங்கி வரும் அமைப்புதான் வாரிஸ் பஞ்சாப் டி.

இதன் தலைவராக இருக்கும் அம்ரித்பால் சிங்கின் உதவியாளர் சமீபத்தில் குற்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்டார். கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டதாக அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. ஆனால் போலீஸ் பாரபட்சமாக செயல்படுவதாகவும், உள்நோக்கத்துடன் தன்னுடைய உதவியாளரை கைது செய்திருப்பதாகவும் அம்ரித்பால் சிங் விமர்சித்திருந்தார்.
மேலும், கைது செய்யப்பட்ட தன்னுடைய உதவியாளரை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். காவல்துறை இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.
இதனையடுத்து தனது ஆதராவளர்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டார் அம்ரித்பால். நூற்றுக்கணக்கில் வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பை சேர்ந்த சீக்கியர்கள் கையில் வாள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட நிலையில் பஞ்சாப் மாநிலமே அதிர்ச்சியில் உறைந்தது. இதனையடுத்து அம்ரித்பால் சிங்கின் உதவியாளர் விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால் அதன் பின்னர் அம்ரித்பால் சிங் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த அறவிப்பு வெளியான அடுத்த நொடியே அம்ரித்பால் தப்பி சென்றுவிட்டார். சில நேரங்களில் கையில் குடையுடன் மார்டனாகவும், சில நேரங்களில் சாமியார் போலவும் அம்ரித்பால் கெட்டப்பை மாற்றிக்கொண்டே இருந்தார்.
இப்படியாக ஏறத்தாழ ஒரு மாத காலம் அம்ரித்பாலை பிடிக்க காவல்துறை தலைக்கீழ் நின்று தண்ணீர் குடித்தது. ஒரு கட்டத்தில் அம்ரித்பால் நேபாளத்திற்கு தப்பி சென்றுவிட்டதாகவும், அங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிப்பதாகவும் கூட தகவல்கள் வெளியாகின. எனவே அங்குள்ள இந்திய தூதரகத்தை அணுகி அம்ரித்பால் தப்பிவிடாமல் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அம்ரித்பாலுக்கும் அவரது குழுவுக்கும் வெளிநாடுகளில் உள்ள சீக்கிய பிரிவினைவாத அமைப்பை சேர்ந்தவர்கள் பொருளாதார உதவி செய்கிறார்கள் என்பதை கண்டுபிடித்த போலீஸ் இந்த உதவியை முதலில் முடக்கியது. இவ்வாறு பணம் அணுப்புபவர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர்.

அடுத்ததாக அம்ரித்பாலின் நெருங்கிய நண்பர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கியது காவல்துறை. அடுத்தடுத்த நடவடிக்கைகளில் அம்ரித்பால் சுற்றிவளைக்கப்பட்டார். தப்பி செல்லவே முடியாத நிலை ஏற்பட்ட நிலையில் இன்று காலை பஞ்சாபின் மோகா பகுதியில் அவர் காவல்துறையினரிடம் சரணடைந்தார்.
இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது இன மோதல்களை தூண்டுதல், கொலை முயற்சி, காவல் துறையினர் மீது தாக்குதல், அரசு ஊியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேசிய பாதுகாப்பு சட்டமும் இவர் மீது போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications