சிங்கத்தை இழந்த பஞ்சாப்.. 5 முறை முதல்வர்! 94 வயதிலும் தேர்தல் - யார் இந்த பிரகாஷ் சிங் பாதல்?
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் தனது 95 வயதில் உடல்நலக்குறைவால் காலமாகி உள்ளார். அவரது தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் பயணம் குறித்து விரிவாக பார்ப்போம்.
கடந்த 3 ஆண்டுகளில் 3 முதலமைச்சர்களை பார்த்துவிட்டு பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவர் பிரகாஷ் சிங் பாதல். சீக்கியர்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட பிராந்திய கட்சியான சிரோமணி அகாலி தளம் கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பாதல் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் தேர்தலில் வரை போட்டியிட்டார்.
கடந்த 1927 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவிற்கு உட்பட்ட பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அபுல் குரானா என்ற பகுதியில் டிசம்பர் 8 ஆம் தேதி பிறந்தவர் பிரகாஷ் சிங் பாதல். லாகூரில் உள்ள ஃபார்மன் கிறிஸ்துவ கல்லூரியில் படித்து பட்டப்படிப்பை நிறைவு செய்த அவர் தனது 20 வயதிலேயே அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார்.

சாதாரண சார்பஞ்சாக தொடங்கிய பிரகாஷ் சிங் பாதலின் அரசியல் வாழ்க்கை முதலமைச்சர் நாற்காலி வரை அமர வைத்தது. அரசியலுக்குள் நுழைந்த 10 ஆண்டுகளில், தன்னுடைய 30 வயதில் சிரோமணி அகாலி தளம் கட்சி சார்பில் 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்ததாக 1969 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலிலும் வெற்றிபெற்ற அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. மீன்வளத்துறை, பால்வளத்துறை, கால்நடைத் துறை, பஞ்சாயத்து ராஜ், சமூக மேம்பாடு ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்து திறம்பட செயலாற்றினார் பிரகாஷ் சிங் பாதல். 1972, 1980, 2002 ஆகிய ஆண்டுகளில் பஞ்சாப் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார் பாதல்.
10 முறை பஞ்சாப் மாநில சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து இருக்கும் அவர், 5 முறை அம்மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்து இருக்கிறார். கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் முறையாக பிரகாஷ் சிங் பாதல் பஞ்சாப் மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்ததாக 1977 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை அவர் பஞ்சாப் முதலமைச்சராக பதவி வகித்தார்.

1997 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை மூன்றாவது முறையாக பஞ்சாப் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பாதல் அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தார். அதன் பின்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு தேர்தலில் வென்ற அவர் 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்ததுடன் அடுத்ததாக 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றிபெற்று 2007 முதல் 2017 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார்.
அதுமட்டுமின்றி கடந்த 1977 ஆண்டில் 3 மாதங்கள் அவர் மத்திய விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்து இருக்கிறார். சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவராக 1996 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை அவர் பதவி வகித்து உள்ளார். மாநிலத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து மாநில மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்து உள்ளார்.
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான பிரகாஷ் சிங் பாதலுக்கு சுக்பீர் சிங் பாதல் என்ற மகனும், பர்னீத் கவுர் என்ற மகளும் உள்ளனர். பர்னீத் கவுர் முன்னாள் மத்திய அமைச்சர் அதேஷ் பர்தாப் சிங் கைரோனை திருமணம் செய்து உள்ளார். சுக்பீர் சிங் பாதல் பஞ்சாப் மாநில துணை முதலமைச்சராக பதவி வகித்து இருக்கிறார். அகாலிதளம் கட்சியின் தலைவராகவும் உள்ளார். பிரகாஷ் சிங்கின் மனைவி கடந்த மே 2011 ஆம் ஆண்டு கேன்சரால் பாதிக்கப்பட்டு காலமானார்.
2017 ஆம் ஆண்டுக்கு பிறகும் தீவிர அரசியலில் பிரகாஷ் சிங் செயல்பட்டு வந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு பஞ்சாபில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தன்னுடைய 94 வது வயதிலும் போட்டியிட்டார் பிரகாஷ் சிங். அதில் ஆம் ஆத்மி வேட்பாளர் குர்மீத் சிங் குடியனிடம் அவர் தோல்வியடைந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளார். அவரது மறைவு பஞ்சாப் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு இருக்கும் இரங்கல் குறிப்பில், "திரு பிரகாஷ் சிங் பாதலின் மறைவு செய்தியால் மிகவும் வேதனை அடைந்தேன். அவர் இந்திய அரசியலின் மகத்தான ஆளுமை. நம் நாட்டிற்கு பெரும் பங்காற்றிய முக்கியமான அரசியல்வாதி.
பஞ்சாபின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்த பிரகாஷ் சிங் பாதல், நெருக்கடியான காலங்களில் மாநிலத்தை திடப்படுத்தினார். அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு இழப்பாகும். அவருடன் பல ஆண்டுகளாக நெருக்கமாக நான் பேசி இருக்கிறேன். அவரிடம் பல விசயங்களை கற்று உள்ளேன்.
எங்களின் எண்ணிலங்காத உரையாடல்களை நினைவுகூர்கிறேன். அதில் எப்போதும் அவரது அறிவாற்றல் தெளிவாக தெரியும். அவரது குடும்பத்தினருக்கும் எண்ணிக்கையில் அடங்காத ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications