Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

26 வயசு "பாலைவன புயல்".. பாஜகவிற்கு வடக்கில் சிம்ம சொப்பனமாக மாறிய சுயேச்சை வேட்பாளர்.. யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: நாடு முழுக்க இந்தியா கூட்டணி - பாஜக கூட்டணி இடையே கடுமையான மோதல் நிலவி வரும் நிலையில்.. ஒரே ஒரு சுயேச்சை வேட்பாளர் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார்.

தேசிய அளவில் மக்களின் பார்வையை 27 வயதான ராஜ்புத் இனத்தலைவர் ரவீந்திர சிங் பதி தன் மீது திருப்பி உள்ளார். ராஜஸ்தானின் பார்மரில் போட்டியிடும் ரவீந்திர சிங் பதி அங்கே பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக மாறி உள்ளார்.

Who is Ravindra Bhati The Rajput leader playing a major role against BJP in Rajasthan

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொகுதிதான் ராஜஸ்தானின் பார்மர் தொகுதி. இங்கே இத்தனை காலம் பாஜகவை ஆதரித்த ராஜ்புத் பிரிவினர் இந்த முறை பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளனர். அங்கே பாஜகவை அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இந்த நிலையில்தான் ரவீந்திர சிங் பதி அங்கே பாஜகவை எதிர்த்து போட்டியிடுகிறார்.

பாலைவனப் புயல் என்று அப்பகுதி லோக்கல் மக்களால் அழைக்கப்படும் ரவீந்திர சிங் பதி அங்கே பாஜகவை புரட்டி எடுத்து வருகிறார். பாஜக அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க மறுத்ததைத் தொடர்ந்து சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். ஜாட் மற்றும் ராஜ்புத் வாக்காளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இருக்கும் இவர் அங்கே பாஜகவிற்கு பெரிய அளவில் பிரஷர் கொடுத்து வருகிறார்.

இன்று தேர்தல்: லோக்சபா தேர்தலின் இரண்டாம் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் இன்று 2ம் கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. கேரளாவில் 20 தொகுதிகள் உள்ள நிலையில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது.

ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவை தவிர கர்நாடகாவில் 18 தொகுதிகள் , ராஜஸ்தானில் 13 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. மகாராஷ்டிரா, உத்தர பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள் , மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது.

பீகார், அசாமில் தலா 5 தொகுதிகள், மேற்குவங்கம், சத்தீஸ்கர் மாநிலங்களில் தலா 3 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 88 தொகுதகிளில் மொத்தம் 1,202 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பாஜகவிற்கு சிக்கல்; இந்த தேர்தலோடு இன்று பார்மர் தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது. கடந்த இரண்டு தேர்தலில் இங்கே பாஜக வென்ற நிலையில் இந்த முறை அங்கே கடந்த முறை எம்பியாக இருந்த கைலாஷ் சவுத்தாரி மீண்டும் பாஜக சார்பாக களமிறங்கி உள்ளார். காங்கிரஸ் சார்பாக உமேதா ராம் பலியால் போட்டியிடுகிறார்.

இங்குதான் 26 வயதில் சுயேட்சையாக ரவீந்திர சிங் பதி போட்டியிடுகிறார். ரவீந்திர பதி 2023 ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பார்மரில் உள்ள ஷியோ சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ. ஆனார். இதன் மூலம், 2023 ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் அன்ஷுமன் சிங் பதியுடன் இணைந்து அவர் அந்த மாநிலத்தின் இளமையான எம்எல்ஏ ஆனார். இவரின் பிரச்சாரம் அங்கே பாஜகவிற்கு எதிராக ராஜ்புத் பிரிவினரை அவர் தொகுதியில் மட்டுமின்றி மற்ற தொகுதிகளிலும் திரட்டி உள்ளது.

அங்கே சுயேட்சையாக இவர் எம்எல்ஏ ஆனார். இந்த நிலையில்தான் தற்போது இவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.

என்ன காரணம்: ராஜ்புட் உள்ளிட்ட சத்திரிய வம்சத்து மன்னர்கள் இஸ்லாமியர்களுடன் நெருக்கமாக , அடிமை போல இருந்தனர். இஸ்லாமிய மன்னர்கள் கொடுத்ததை வைத்து ஆட்சி செய்தனர் . தங்கள் பெண்களை கூட இஸ்லாமியர்களுக்கு மனம் முடித்து கொடுத்தனர் என்று விமர்சனம் செய்யும் தொனியில் மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா பேசி இருந்தார். பாஜகவை சேர்ந்த மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா இதன் மூலம் சத்திரிய வம்சத்து அரசர்களை அவமதித்துவிட்டதாக சத்திரியர் இடையே விமர்சனம் வைக்கப்பட்டது.

மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலாவின் கருத்துக்கு எதிராக குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக 'சத்திரிய' சமூகத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்தான், உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் நேற்று 'சத்திரிய' சமூகத்தினர் பாஜகவிற்கு எதிராக பஞ்சாயத்து நடத்தினர். சத்திரிய சமூகத்தின் நலன்கள் மற்றும் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை 'எதிர்ப்பது' பற்றி இதில் ஆலோசிக்கப்பட்டது.

பாஜகவிற்கு எதிராக செயல்பட வேண்டும் என்று சத்திரிய ஜாதி பிரிவை சேர்ந்த உறுப்பினர்களுக்கு இந்த பஞ்சாயத்தில் அறிவுறுத்தப்பட்டது.

பாஜகவிற்கு எதிராக பஞ்சாயத்து: முன்னதாக சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள நானௌடா என்ற இடத்தில் நடைபெற்ற இந்த பஞ்சாயத்தில் ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சத்திரிய சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டனர். உத்தர பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுக்க எந்த மாநிலத்திலும் சத்திரியர்கள் பாஜகவிற்கு வாக்களிக்க கூடாது என்று இதில் முடிவு எடுக்கப்பட்டது.

வடஇந்திய பஞ்சாயத்துகளில் எடுக்கப்படும் முடிவுகள், அதில் கலந்து கொள்ளும் எல்லோராலும் மிக தீவிரமாக கடைபிடிக்கப்படும் என்பதால் பாஜகவிற்கு இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிசான் மஸ்தூர் சங்கதன் தலைவரும், சமூகத் தலைவருமான தாக்கூர் பூரன் சிங் இது பற்றி கூறுகையில், பாஜக வேட்பாளர்களை தோற்கடிக்க எந்த கட்சிக்கு சிறந்த வாய்ப்பு உள்ளதோ அந்த கட்சிக்கு எங்கள் சமூகத்தினர் ஆதரவளிப்பார்கள். நாங்கள் எப்போதும் பாஜகவை ஆதரித்தோம், ஆனால் அவர்கள் ராஜ்புத் தலைவர்களை ஓரங்கட்டி வருகின்றனர். லோக்சபா தேர்தலுக்கான டிக்கெட் விநியோகத்தில் எங்கள் சமூகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது, என்றுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+