சுற்றி நின்ற போலீஸ்.. குருத்வாரா உள்ளே போய் இருந்தால் அவ்வளவுதான்! அம்ரித்பால் சிங் சரண்டர் ஆனது ஏன்
சண்டிகர்: பஞ்சாப்பில் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் இன்று போலீசில் சரண் அடைந்தார். இத்தனை நாட்கள் ஆட்டம் காட்டிக்கொண்டு இருந்த அம்ரித்பால் சிங் திடீரென போலீசில் சரண் அடைந்தது ஏன் என்று வெளியாகி உள்ளன.
அம்ரித்பால் சிங் கடந்த மார்ச் 18ம் தேதியில் இருந்து தேடப்பட்டு வந்தார். இவரை மூன்று போலீசார் படை தேடி வந்த நிலையில் பஞ்சாப்பில் இருக்கும் மோகா என்ற கிராமத்தில் இவர் போலீசில் சரணி அடைந்தார்.

இதையடுத்து தற்போது பஞ்சாப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த விஷயத்தை காரணம் காட்டி பஞ்சாப்பில் மோதல், கலவரம் ஏற்பட கூடாது என்று அங்கே மிகப்பெரிய அளவில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீஸ், அசாம் போலீஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு படை இணைந்து தேடி வந்தது. இவர்கள் மூவரின் டீம் இணைந்து இன்று அம்ரித்பால் சிங்கை கைது செய்தது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்த சட்டத்தின் கீழ் கைது செய்ய காரணம் அவசியம் இல்லை. ஒரு வருடம் இந்த சட்டத்தின் கீழ் எந்த காரணமும் இன்றி ஒருவரை சிறையில் அடைத்து வைக்க முடியும்.
அம்ரித்பால் சிங் காலிஸ்தான் - பாகிஸ்தான் தீவிரவாதி, ஏஜென்ட் என்று அரசால் வர்ணிக்கப்பட்டு வருகிறார். காலிஸ்தான் கருத்துக்களை பேச்சாளராக, பிரிவினைவாதியாக இவர் பார்க்கப்படுகிறார். காலிஸ்தான் தீவிரவாதி ஜர்னல் சிங் பின்டர்ன்வாலேவின் தீவிர பின்தொடர்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்டர்ன்வாலே 2.0 என்று அம்ரித்பால் சிங் அவரின் பின்தொடர்பாளர்கள் மூலம் வரையறுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

கைது எப்படி?: இவரை இன்று போலீசார் கைது செய்யவில்லை. மாறாக அவர் போலீசில் சரண் அடைந்தார்.
அம்ரித்பால் சிங் மோகா என்ற கிராமத்தில் வசித்து வந்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்தே அங்கே கடந்த சில நாட்களாக போலீசார் ரோந்து பணிகளை செய்து உள்ளனர்.
அப்போது அங்கே இருக்கும் சீக்கிய கோவில் ஒன்றில் அம்ரித்பால் சிங் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உள்ளே போலீஸ் சென்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும் என்று போலீசார் செல்லவில்லை.
இதனால் அந்த கோவிலை போலீசார் சுற்றி வளைத்தனர். இதனால் அம்ரித்பால் சிங் வெளியே செல்ல முடியாமல் லாக் செய்யப்பட்டார். இதன் காரணமாக வேறு வழியின்றி கடைசியில் அம்ரித்பால் சிங் போலீசார் முன்னிலையில் சரண் அடைந்தார்.
இதையடுத்து விமானம் மூலம் அவர் அசாம் கொண்டு செல்லப்பட உள்ளார்.

தேடுதல் வேட்டை: அம்ரித்பால் சிங்கை கடந்த மார்ச் 18ம் தேதியில் இருந்து போலீசார் தேடி வருகின்றனர். இவரின் 'Waris Punjab De'அமைப்பின் நிர்வாகிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த பிப்ரவரியில், அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஜ்னாலா போலீஸ் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் வாள்கள் மற்றும் துப்பாக்கிகளை காட்டி போலீஸ் நிலைய தடுப்புகளை உடைத்து போலீசாருடன் சண்டை போட்டு தங்கள் குழுவை சேர்ந்த ஒருவரை விடுதலைசெய்தனர் .
இதையடுத்து அம்ரித்பால் சிங்கை கைது செய்ய போலீசார் முடிவு செய்த ஆபரேஷனை தொடங்கினார். கடந்த ஒரு மாதமாக தேடப்பட்டு வந்த அம்ரித் பால் சிங் இன்று போலீசாரிடம் சரண் அடைந்தார்.












Click it and Unblock the Notifications