என்னா அடி.. கன்னத்தில் அறைந்த போலீஸை.. திருப்பி அடித்த இளைஞர்.. தூக்கிய போலீஸ்.. பரபர வாணியம்பாடி
வாகன ஓட்டியை கன்னத்தில் அறைந்த போலீஸ்காரரை இளைஞர் திருப்பி அடித்தார்
ஆம்பூர்: வாணியம்பாடி அருகே வாகன ஓட்டியை பளாரென கன்னத்தில் அறைந்த சிறப்பு உதவி ஆய்வாளரை திருப்பி அடித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது... இதையடுத்து இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் மிக வேகமாக பரவி கொண்டு இருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே நயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்.. 30 வயதாகிறது.. இவர் 2 நாட்களுக்கு முன்பு பைக்கில் ஆலங்காயம் வந்துள்ளார்..

அப்போது ஆலங்காயம் காவல் உதவி ஆய்வாளர் உமாபதி தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்... மணிகண்டன் வந்த பைக்கையும் சோதனைக்காக போலீசார் நிறுத்த சொல்லி உள்ளனர்...
ஆனால், மணிகண்டன் பைக்கை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த காவல் உதவி ஆய்வாளர் உமாபதி, மணிகண்டனை பின்னாடியே துரத்தி கொண்டு சென்றார்.. அவரை சுற்றி வளைத்து பிடித்து சரமாரியாக தாக்கினார்.. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த மணிகண்டன், ஆத்திரமடைந்து பதிலுக்கு உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தி உள்ளார்...
இதற்கு பிறகு 2 பேருமே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.. இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் ஒன்று திரண்டு வந்துவிட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் மணிகண்டன் பலத்த காயமடைந்தார்.. பின்னர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டார்..
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்நிலையில், இவர்கள் 2 பேரும் ஒருவர் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, வாணியம்பாடி அருகே வாகன ஓட்டியை கன்னத்தில் அறைந்த சிறப்பு உதவி ஆய்வாளரை திருப்பி அடித்த மணிகண்டன் கைது செய்யப்பட்டார்...
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்தசில நாட்களாக மணிகண்டன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது ஓரளவு உடல்தேறி வந்த நிலையில், போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.. இந்த சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. கன்னத்தில் மணிகண்டன் அறைந்த வீடியோவையும் பலர் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications