Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் குளறுபடி.. நாளை ஹாரிஸ் ஜெயராஜ் இசை கச்சேரிக்கு நிபந்தனையுடன் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நாளை நடைபெறும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சிக்கு சென்னை காவல் துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி அளித்துள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி இசை கச்சேரி நடத்துவதாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் அன்றைய தினம் சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

Chennai police gives permission for Haris Jayaraj live in concert

அதே டிக்கெட்டை கொண்டு வேறு ஒரு நாளில் நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி இந்த இசை நிகழ்ச்சியை செப்டம்பர் 10 ஆம் தேதி நடத்துவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி பலருக்கு கசப்பான அனுபவத்தையே கொடுத்தது. சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஆதித்யராம் கிரவுண்டில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதை காண 3 ஆயிரம் முதல் ரூ 25 ஆயிரம் வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

இந்த நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவிலான டிக்கெட்டை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழங்கியிருந்தனர். இதனால் டிக்கெட் கவுன்ட்டரில் ஏகப்பட்ட கூட்டம் இருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் டிக்கெட் வாங்கியும் கூட்ட நெரிசல், வாகன பார்க்கிங் ஒழுங்கின்மை, உள்ளே செல்ல இயலாமை, கடும் கூட்டம் உள்ளிட்டவைகளால் பலர் அந்த நிகழ்ச்சியை பார்க்காமலேயே திரும்பி சென்றனர்.

மேலும் குழந்தைகளின் உயிர்தான் முக்கியம் என கருதி வெளியே வந்துவிட்டதாக ஒரு சிலர் கண்ணீர் மல்க கூறியிருந்தனர். இந்த நிலையில் கோல்டு, டயமன்ட், பிளேட்டினம் என 3 பிரிவுகளில் வெவ்வேறு விலையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் கோல்டு டிக்கெட் வாங்கியவர்கள் பிளாட்டினத்திலும் உட்கார்ந்திருந்ததாகவும் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த போலீஸாரோ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே அங்கு இல்லை என்றும் பொது மக்கள் வேதனை தெரிவித்தனர்.

மேலும் பலர் லட்சக்கணக்கில் குடும்பத்துடன் டிக்கெட் வாங்கியும் இது போன்ற மோசமான ஏற்பாட்டால் நிகழ்ச்சியை பார்க்காமலேயே வெளியேறுகிறோம் என்றனர். பைக், கார் விட கூட பார்க்கிங் வசதி இல்லை, ஸ்பீக்கர் பாக்ஸ் சரியில்லை என பல புகார்கள் எழுந்தன. இதுகுறித்து போலீஸார் கூறுகையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவில் டிக்கெட் விற்பனை செய்ததுதான் இதற்கு மிக பெரிய காரணம் என தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்து வருத்தம் தெரிவித்த ஏ.ஆர். ரகுமான், நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் தனக்கு மெயில் அனுப்புமாறு கூறியிருந்தார். அதன்படி மெயில் அனுப்பியோருக்கு அவர்கள் கட்டிய பணம் திரும்ப கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு ஏ.ஆர். ரகுமானுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றாலும் இது முழுக்க முழுக்க விழா ஏற்பாட்டாளர்களின் குளறுபடி என்ற போதிலும் டிக்கெட்டுக்கான கட்டணத்தை திருப்பி கொடுத்ததை பலர் பாராட்டியிருந்தனர்.

இந்த நிலையில் நாளை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் Noise and Grains நிறுவனம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து சென்னை காவல் துறையிடம் அனுமதி கேட்ட போது ஏ.ஆர். ரகுமான் குளறுபடிகளை கருத்தில் கொண்டு கடும் நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

அதாவது அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக டிக்கெட் விற்கக் கூடாது. 5000 கார் மற்றும் பைக்குகள் நிறுத்துமிடம் இருப்பதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 20,000 பார்வையாளர்கள் வரை பங்கேற்கும் மைதானத்தில் 15 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Noise and Grains நிறுவனம் ஏற்கெனவே பல பாடகர்கள், இசையமைப்பாளர்களுக்கு இசை நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+