சென்னை: விடாது கொட்டிய 8 மணி நேர பெருமழை-செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் திறப்பு
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று 8 மணிநேரம் இடைவிடாமல் கொட்டிய பெருமழையால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 1,000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
Recommended Video
வளிமண்டல் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது என்பது சென்னை வானிலை மையத்தின் கணிப்பு. ஆனால் இன்று யாருமே கணிக்காத நிலையில் சென்னையில் பெருமழை இடைவிடாமல் கொட்டித் தீர்த்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 8 மணிநேரம் மேகவெடிப்பைப் போல மழை தொடர்ச்சியாக வெளுத்து வாங்கியது. சென்னை அடையாறு, ராஜா அண்ணாமலைபுரம், எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் ஒரே நாளில் கொட்டி வெளுத்த கனமழையால் ஒட்டுமொத்த மாநகரின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

கடுமையாக பாதித்த போக்குவரத்து
சென்னை நகரின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடு ஓடுவதாலும் பல அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நிற்பதாலும் வாகன போக்குவரத்து மிக மோசமாக பாதிக்கப்பட்டது. ஒவ்வொரு இடத்தையும் கடப்பதற்கு பல மணிநேரம் ஆனது. சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள்தான் பொதுமக்களுக்கு ஓரளவு ஆறுதலாக இருந்து வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவையும் தற்போது இரவு 12 மணிவரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

3 சுரங்க பாதைகள் மூடல்
வெள்ள நீர் தேங்கி இருப்பதால் கங்குரெட்டி சுரங்கப் பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளன. சென்னை நகரின் பல பகுதிகளிலும் வாகனப் போக்குவரத்து மெதுவாக இருப்பதாகவும் சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மேலும் சில மணிநேரம் கனமழை வெளுக்கும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை மையம்.

செம்பரம்பாக்கம் ஏரி
இடைவிடாது பெய்யும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி சுமார் 98% நிரம்பி இருக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு
இதனைத் தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர் வரத்து வினாடிக்கு 2,900 கன அடியாக உள்ளது. இந்த நீர் வரத்து அதிகரித்தால் உபரி நீர் திறப்பும் மேலும் அதிகரிக்கப்படலாம் என்கின்றனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications