தமிழகத்தில் மேலும் 1,141 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1,141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,00,029 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து 2-வது இடத்தில் இருந்தது. அண்மைகாலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

மேலும் 1,141 பேருக்கு உறுதி
தற்போது மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவுக்கு அடுத்ததாக கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் இன்று தமிழகத்தில் இன்று மட்டும் 63,989 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் மேலும் 1,141 பேருக்கு கொரோனா உறுதியானது.

8 லட்சத்தை தாண்டியது
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,00,029 ஆக அதிகரித்தது. கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் மேலும் 14 பேர் மரணம் அடைந்தனர். தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 11,909.

இன்று 1,203 பேர் டிஸ்சார்ஜ்
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் இன்று மட்டும் 1,203 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 7,78,081 ஆகும்.

தமிழகத்தில் 1.30 கோடி பரிசோதனைகள்
தமிழகத்தில் மொத்தம் 1,30,20,594 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் தமிழகத்தில் மொத்தம் 10,039 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் (ஆக்டிவ் கேஸ்கள்).

சென்னையில் 343 பேருக்கு கொரோனா
சென்னையில் இன்று மேலும் 343 பேருக்கு கொரோனா உறுதியானது. சென்னைக்கு அடுத்ததாக கோவையில் மேலும் 124 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications