"2 பேரை தூக்கறோம்" அதை விடுங்க.. யாரு நயினாரா இப்படி பேசியது.. திமுகவுடன் பாஜக கூட்டணி?.. 3 கிளியர்
பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்குமா என்பது குறித்து நயினார் நாகேந்திரன் பேட்டி தந்துள்ளார்
சென்னை: தமிழக பாஜகவின் மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன், 3 விஷயங்களை தெளிவுபடுத்தி பேசியுள்ளது, எடப்பாடி தரப்புக்கு எரிச்சலை அதிகரிக்க செய்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார், பாஜக எம்எல்ஏக்கள் 2 பேரை தூக்க போறோம் என்று ட்வீட் பதிவிட்டிருந்தது, மிகப்பெரிய சலசலப்பை அப்போது ஏற்படுத்தியது..
யார் அந்த 2 பேர் என்ற குழப்பம் ஏற்பட்ட நிலையில், முதல் பெயரே நயினாராக இருக்குமோ? என்ற சந்தேகம்தான் சோஷியல் மீடியாவில் அதிகமானது..

தூக்கறோம்
ஆனால், அப்படி ஒரு நிகழ்வு எதுவுமே நடக்கவில்லை.. அந்த 2 பேர் யார் என்று இதுவரை தெரியாவிட்டாலும், ஒவ்வொரு முறையும், பாஜக சீனியர் அதிருப்தியாளர் என்றாலே நயினாரின் பெயரும் அடிபட்டு கொண்டே இருப்பதை மறுக்க முடியாது. நயினாரை பொறுத்தவரை, அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தவர்.. எடுத்த எடுப்பிலேயே துணைத்தலைவர் பதவியை தந்தது பாஜக.. எம்பி தேர்தலிலும் சீட் கொடுத்தது. ஆனால் நயினாருக்கோ, மாநில தலைமை பதவி காலியாக இருந்தபோது, அதன் மீது ஒரு கண் இருந்ததாகவும், குறிப்பாக, நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு இடையேதான் பலத்த போட்டியே இருந்ததாகவும் அப்போது சலசலக்கப்பட்டது.

நெருடல்
பிறகு நிர்வாகிகள் மாற்றத்திலாவது தனக்கு பெரிய பொறுப்பு அதாவது பொதுச்செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.. ஆனால், அதிலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. பிறகு பாஜக சட்டமன்ற குழு தலைவர் பதவியை நயினாருக்கு தந்தது என்றாலும், பாஜகவின் கொள்கை, கோட்பாடுகள் நயினாருக்கும் நெருடலை தந்து வருவதாக சொல்லப்பட்டது.. அதுமட்டுமல்ல, நீட் விவகாரத்தில்கூட, தமிழக மக்களின் ஆதரவுக்கு குரல் என்றுதான் நயினார் பேசியிருந்தார்.. இப்படி பேசியதுகூட, பாஜக மீதான தன்னுடைய அதிருப்தியின் வெளிப்பாடாகவும் பார்க்கப்பட்டது.

சந்தோஷம்
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் முன்பு நயினார் பேசிய பேச்சினால், தமிழக அரசியல் கட்சிகள் குழம்பி போய்விட்டன.. "தமிழக முதல்வர் நெல்லைக்கு அடிக்கடி வரவேண்டும். முதல்வரின் வருகையால் அனைத்து சாலைகளும் நிச்சயமாக வேலை பார்க்கப்படுகிறது, பழுதுபார்க்கப்படுகிறது. இதனால் எங்களுக்கு எல்லாம் சந்தோஷமாக இருக்கிறது. எனவே முதல்வர் அடிக்கடி வந்து நிறைய நலத்திட்டங்களை எங்களுக்கு தர வேண்டும்" என்று நயினார் நாகேந்திரன் பேசியிருந்தார். நயினார் பேசியதை ஸ்டாலினும் உற்று கவனித்து கொண்டிருந்தார்.

நயினாரா நயினாரா
அதுமட்டுமல்ல, இதற்கு பிறகு, நெல்லை அரசு மருத்துவமனையில் நடந்த விழா ஒன்றில் மீண்டும் திமுகவை பாராட்டியிருந்தார் நயினார் நாகேந்திரன்.. "ஒரு செயலை செய்கின்றபோது எந்த கட்சியாக இருந்தாலும் எந்த ஆட்சியாக இருந்தாலும் பாராட்ட வேண்டும்... அதனால், அமைச்சர், முதல்வரை நான் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்" என்று அரசு விழாவில் கலந்து கொண்டு நயினார் பேசியது, மறுபடியும், திமுக பக்கம் தாவ போகிறாரா என்ற பேச்சு வலம் வந்து கொண்டேயிருந்தது.

1 2 3
இந்நிலையில், மொத்தம் 3 விஷயங்களை ஒரே பேட்டியில் தெளிவுபடுத்தி உள்ளார் நயினார் நாகேந்திரன்.. 2 நாட்களுக்கு முன்பு, பாஜக - திமுக கூட்டணி வைக்கிறது என்று சிவி சண்முகம் கொளுத்தி போட்டிருந்த நிலையில், அதற்கு பின்னணி காரணம் என்ன? யார் தந்த தைரியத்தில் சிவி சண்முகம் அப்படி பேசினார் என்று இதுவரை தெரியாவிட்டாலும், ஒரு சில யூகங்கள் வலம்வருகின்றன.. பாஜகவுடன் கூட்டணி வைக்க விருப்பமில்லை என்பதையே, சிவி சண்முகம் இப்படி மறைமுகமாக வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், நாங்கள் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று அண்ணாமலை உட்பட பலரும் தெரிவித்து வருகின்றனர்.. இதைதான், நயினாரும் இன்று சொல்லி உள்ளார்.

முகாந்திரம்
செய்தியாளர்களிடம் நயினார் இன்று பேசும்போது, பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகளிடம் கருத்து வேறுபாடு இருக்கலாம்... ஆனால் நாங்கள் இதுவரை அதிமுக கூட்டணியில்தான் இருந்து வருகிறோம்... திமுகவுடன் பாஜக கூட்டணி சேர்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை... இது தொடர்பாக கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.,.. அரசுக்கு சொந்தமான இடங்களில் குவாரி அமைக்கப்பட்டால் அதனை பாஜக நிச்சயமாக எதிர்க்கும். தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் வெற்றி பெறும்" என்றார்..

நகருது நகருது
அதிமுகவுடன் கூட்டணி என்று சொல்வதில், நயினார் எடப்பாடி தலைமையிலான கூட்டணியைத்தான் சொல்கிறாரா? என்பது தெரியவில்லை.. ஆனால், அதிமுகவுடன்தான் பாஜக இன்னமும் கூட்டணியில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி, திமுகவுடன் கூட்டணி ஒருபோதும் கிடையாது என்பதை உறுதிப்படுத்தி, திமுகவுக்கு எதிராகவே தன்னுடைய அரசியல் நகர்கிறது என்பதையும் ஒரே பேட்டியில் தெளிவுபடுத்திவிட்டார் மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன். இருந்தாலும், "2 பேரை தூக்க போறோம்" என்று செந்தில்குமார் எம்பி அன்று சொன்னாரே? அவர்கள் யாரா இருக்கும்? இதுவரை அதற்குத்தான் நமக்கு விடை கிடைக்கவில்லை..!!
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications