இன்று சென்னையை மட்டுமல்ல... பெருங்களத்தூரை தாண்டுறதும் ஈஸி.. ஊருக்கு போறவங்களுக்கு நற்செய்தி
சென்னை: சுப முகூர்த்த தினத்தையொட்டி ஆகஸ்ட் 18ம் தேதியான இன்றும் (வெள்ளிக்கிழமை), ஆகஸ்ட் 19ம் தேதியான நாளையும் (சனிக்கிழமை) சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
வரும் 20ம் தேதி மற்றும் 21ம் தேதி நிறைந்த முகூர்த்த நாட்களாகும் ஆடி முடிந்து ஆவணிமாதம் பிறந்துள்ள நிலையில் முதல் முகூர்த்தங்கள் என்பதால் பலரும் தங்களது இல்ல சுபகாரியங்களை மேற்கொள்ள இந்த நாட்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.இதன் காரணமாக இன்றும் நாளையும் ஏராளமான மக்கள் சென்னையில் இருந்தும், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்தும் சொந்த ஊருக்கு செல்வார்கள். அவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

ஏனெனில் இதுபோன்ற முகூர்த்த நாட்களில் ஆம்னி பேருந்துகளை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கட்டணம் இருக்கும்.ரயில்களை பற்றி கேட்கவே வேண்டாம். பொதுமக்கள் அரசு பேருந்துகளை ஊருக்கு போக அதிகம் நம்புகின்றனர். எனவே சிறப்பு பேருந்துகள் இயக்கினால் தான் பொதுமக்களால் சொந்த ஊருக்கு சென்றுவர முடியும்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "வரும் 20-ந்தேதி மற்றும் 21-ந்தேதி ஆகிய தொடர் வளர்பிறை முகூர்த்த நாட்களை முன்னிட்டு, 18-ந்தேதி (இன்று) 19-ந்தேதி (நாளை) ஆகிய நாட்களில் சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும், கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 18-ந்தேதி (இன்று) கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகளும், 19-ந்தேதி (நாளை) 350 பேருந்துகளும் இயக்கப்படும்.
மேலும் பல்வேறு இடங்களில் இருந்து அதாவது கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1,250 பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுமட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டு உள்ளது. சிறப்பு பஸ் இயக்கப்படுவதை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.
மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பேருந்துகளில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் ஒரே தடத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு சிறப்பு சலுகையாக, அடுத்து வரும் தொடர் பயணங்களுக்கு அதாவது 6-வது பயணம் முதல் 50 சதவீத கட்டணச்சலுகை அளிக்கப்படுகிறது.
இதன்படி இத்திட்டத்தின் மூலம் மே 8-ந்தேதி முதல் ஆகஸ்டு 15-ந்தேதி வரை 1,682 பயணிகளுக்கு இச்சலுகை வழங்கப்பட்டு உள்ளது. மேற்கூறிய சலுகையை பெற பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும்" இவ்வாறு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications