மொத்தம் 1,300 ஸ்பெஷல் பேருந்துகள்.. கிளாம்பாக்கம் பயணிகளுக்கு குஷி.. சொந்த ஊருக்கு நிம்மதியா போலாம்
சென்னை: வெள்ளிக்கிழமை முகூர்த்த தினம் என்பதாலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதாலும் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை கிளாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிக்கும் பொதுமக்கள், பண்டிகை நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி என தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதும். இதனால் வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகளை போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த வாரம் சிவராத்ரி, வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள், மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு சென்னை கிளாம்பாகக்த்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் கூறியிருப்பதாவது:-
இன்று 270 பேருந்துகள் இயக்கம்: சிவராத்ரி மற்றும் முகூர்த்த தேதி, சனி ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால் சென்னையில் இருந்து இதர பகுதிகளுக்கு செல்லும் பிற இடங்களுக்கு கூடுதலான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், ஆகிய இடங்களுக்கு இன்று 270 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
நாளை 390 பேருந்துகளும், சனிக்கிழமை 430 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் 70 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை , பெங்களூர், திருப்பூர், ஈரோடு ஆகிய இடங்களில் இருந்தும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
1300 பேருந்துகள் இயக்கம்: இதன்படி மொத்தம் 1,300 பேருந்துகள் இயக்கப்படுகிறது. சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வர வசதியாக சென்னை, பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் முன்பதிவு இணையதளமான www.tnstc.in மற்றும் செல்போன் ஆப் மூலமாக முன்பதிவு செய்து பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications