சென்ட்ரல் - எக்மோருக்கு ரூ.1,800.. புலம் பெயர் தொழிலாளர்களிடம் அடாவடி செய்த ஆட்டோ டிரைவர்கள்?
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தி்ல் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள எழும்பூர் ரயில் நிலையம் செல்வதற்காக ஏறிய வட மாநில தொழிலாளர்களிடம் ரூ.1,800 கேட்டு ஆட்டோ டிரைவர்கள் அடாவடி செய்துள்ளனர்.
தமிழகத்தில் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தினம் தோறும் நூற்றுக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வருவதும், மீண்டும் சொந்த ஊர்களுக்கு செல்வதும் என வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் கிளம்பும் நேரத்தில் சென்டிரல் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிக அளவில் காண முடியும்.

புலம் பெயர் தொழிலாளர்களை இங்குள்ள ஏஜெண்ட்கள் அழைத்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், புதுச்சேரியில் கட்டிட வேலை செய்வதற்காக ஏஜென்ட் மூலமாக வட மாநில தொழிலாளர்கள் 19 பேர் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை சென்ட்ரல் ரயிலில் வந்து இறங்கினர். சென்னையில் இருந்து புதுவைக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். சென்னை எக்மோரில் இருந்து காலை 6.25 மணிக்கு ஒரு ரயில் புதுச்சேரிக்கு செல்வதை அறிந்தனர்.
இந்த ரயிலில் செல்ல திட்டமிட்ட வட மாநில தொழிலாளர்கள் 19 பேரும் வால்டாக்ஸ் சாலை சென்று அங்கு ஆட்டோவை பிடித்துள்ளனர். வெகுதூரம் செல்ல வேண்டும் என்றும் இதனால், ஆட்டோவிற்கு 3 பேர் வீதம் ஏறுங்கள் எனக்கூறி 6 ஆட்டோக்களில் ஏற ஆட்டோ ஓட்டுநர்கள் கூறியதாக தெரிகிறது. ஆனால், எழும்பூர் செல்லாமல் கிழக்கு கடற்கரை சலையில் உள்ள உத்தண்டியில் தொழிலாளர்களை இறக்கி விட்டுள்ளனர்.
எழும்பூர் பெரிய ரயில் நிலையம் என்று கேள்வி பட்டு இருக்கிறோம்.. ஆனால், அதற்கான அறிகுறியே இல்லையே எனக்கூறி தொழிலாளர்கள் கேட்டுள்ளனர். அப்போது 1,800 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் மிரட்டியுள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்களில் ஒருவர் 100 டயல் செய்துள்ளார். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், தகராறில் ஈடுபட்டு இருந்த ஆட்டோ ஓட்டுநர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அவர்களின் ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தனர். சென்னை எக்மோர் மற்றும் செண்ட்ரல் ரயில் நிலையங்களில் சில ஆட்டோ ஓட்டுநர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாக போலீசார் தெரிவித்தனர். எத்தனையோ ஆட்டோ ஓட்டுநர்கள் கனிவுடன் பயணிகளை ஏற்றி சென்றாலும் ஒரு சில ஆட்டோ ஓட்டுநர்களின் இதுபோன்ற நடவடிகையால் அவப்பெயர் ஏற்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தரப்பில் ஆதங்கப்படுவதை காண முடிந்தது
இதனிடையே, மொழி தெரியாத காரணத்தால் ஏற்பட்ட குழப்பத்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும் வட மாநில தொழிலாளர்கள் மாமல்லபுரம் செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு பாதி வழியில் சென்ற போது புதுச்சேரி செல்ல வேண்டும் என்று கூறியதாகவும் ஆட்டோ ஓட்டுநர்கள் தரப்பில் சொல்லப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. போலீஸ் விசாரணையில், மொழி தெரியாததால் இந்த குழப்பம் ஏற்பட்டதும் தெரியவந்ததையடுத்து, சென்னை பூக்கடை போலீசார் ஆட்டோ டிரைவர்களிடம் எழுதி வாங்கி அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications