தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு மீண்டும் அதிகரிப்பு.. சென்னை, புறநகர் மாவட்டங்களில் உயரும் தொற்று!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நேற்று கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 200-க்கும் மேலேயே நீடிக்கிறது.

கொரோனா தாக்கம்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நேற்றை விட சற்று குறைவாகும்.

உயிரிழப்பு மீண்டும் அதிகரிப்பு
இதனால் மொத்த பாதிப்பு 25,83,036 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. சேலத்தில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 5 பேர் இறந்துள்ளனர். திருப்பூரில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரியில் 3 பேரும், சென்னையில் 2 பேரும் உயிரிழந்தனர். இதுவரை கொரோனாவுக்கு 34,428 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,892 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 25,28,209 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் குறைவாக இருக்கிறது.

சென்னையில் சற்று குறைவு
20,399 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,59,897 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3,84,45,003 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 217 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 243 பாதிப்பு பதிவான நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. கோவை மீண்டும் தினசரி பாதிப்பில் முதலிடம் பிடித்துள்ளது.

தஞ்சாவூரில் ஆதிக்கம்
கோவையில் 249 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 119 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 36 பேருக்கும், மதுரையில் 18 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 25 பேருக்கும், திருவள்ளூரில் 85 பேருக்கும், திருச்சியில் 70 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 83 பேருக்கும், விருதுநகரில் 9 பேருக்கும், ஈரோட்டில் 183 பேருக்கும், சேலத்தில் 94 பேருக்கும், நாமக்கல்லில் 53 பேருக்கும், தஞ்சாவூரில் 102 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

5 மாவட்டங்களில் சதம்
சென்னை, கோவை, செங்கல்பட்டு, ஈரோடு மற்றும் தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. தஞ்சாவூர், திருச்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஈரோட்டில் தொற்று அதிவேகமாக அதிகரித்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளான திருவள்ளுர், செங்கல்பட்டிலும் தொற்று அதிகமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications