குட் நியூஸ் மக்களே.. தமிழ்நாட்டில் கொரோனா சற்று குறைவு.. ஆனால் இந்த 5 மாவட்டங்களில் தொற்று ஆதிக்கம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,969 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நேற்றைய பாதிப்பை விட இன்று கொரோனா தொற்று சற்று குறைந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நேற்றை விட இன்று சற்று அதிகரித்துள்ளது. ஆனால் கோவையில் பாதிப்பு தொடர்ந்து அதிகமாக நீடிக்கிறது.

சற்று குறைந்த கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று கொரோனா சற்று குறைந்துள்ளது. நேற்று முன்தினம் தமிழ்நாட்டில் 1,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,969 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு எவ்வளவு?
இதனால் மொத்த பாதிப்பு 25,73,352 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். சேலத்தில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 5 பேர் இறந்துள்ளனர். திருப்பூரில் 3 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 34,289 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,839 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 25,18,777 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் குறைவாக இருக்கிறது.

சென்னையில் சற்று அதிகம்
20,286 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,64,712 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3,76,59,029 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 194 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 200-க்கும் மேல் சென்ற கொரோனா பாதிப்பு 200-க்குள் குறைந்து விட்டது. ஆனால் நேற்றை விட இன்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

கோவையில் ஆதிக்கம்
கோவையில் மட்டும் 223 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 115 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 40 பேருக்கும், மதுரையில் 19 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 42 பேருக்கும், திருவள்ளூரில் 93 பேருக்கும், திருச்சியில் 63 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 84 பேருக்கும், விருதுநகரில் 13 பேருக்கும், ஈரோட்டில் 198 பேருக்கும், சேலத்தில் 91 பேருக்கும், நாமக்கல்லில் 55 பேருக்கும், தஞ்சாவூரில் 110 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

5 மாவட்டங்களில் சதம்
சென்னை, கோவை, செங்கல்பட்டு மற்றும் ஈரோடு மற்றும் தஞ்சாவூரில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. குறிப்பாக கொங்கு மண்டல பகுதிதிகளான கோவை, திருப்பூர், சேலம், ஈரோட்டில் பாதிப்பு தொடர்ந்து அதிகமாக இருக்கிறது. இன்று 12 வயதுக்குட்பட்ட 94 சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications