Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஸ்ல போறீங்களா? 1 கி.மீ 75 பைசா? தமிழக அரசு பேருந்துகளில் ஏறிய கட்டணம்.. புட்டு புட்டு வைத்த ஓபிஎஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் அனைவரும் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்தவர்கள் என்ற நிலையில், அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல என்றும், அரசின் உத்தரவை அரசே மீறுவது கண்டிக்கத்தக்கது என்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

விரைவில் சட்டசபை தேர்தல் வரப்போகிறது.. இதற்காக அனைத்து தமிழக கட்சிகளும் இப்போதே தயாராகி வருகின்றன.. அந்தவகையில், திமுக அரசு மீதான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.

1 km 75 paise bus fair and OPS urged to stop charging extra fares in Tamil Nadu Government Buses

பால் விலை: இதில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தினந்தோறும் ஒரு அறிக்கையை வெளியிட்டு வருகிறார். திமுக அரசு மீதான குற்றச்சாட்டுகளை கூறி, கடுமையாக விமர்சித்தும் வருகிறார். பால் விலை, முத்திரை கட்டணம் உயர்வு முதல் மின்கட்டணம் உயர்வு வரை கண்டித்து வருகிறார்.. அந்தவரிசையில் இப்போது, அரசு பஸ்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கும் கண்டனம் தெரிவித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஓபிஎஸ் கூறியிருப்பதாவது:-

"அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்களின் கட்டணத்தை எவ்வித முன் அறிவிப்புமின்றி தி.மு.க. அரசு உயர்த்தி உள்ளது. ஏழை-எளிய மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. சென்னையை ஒட்டிய புறநகர் பகுதிகளில் ஒரு கிலோ மீட்டருக்கு உட்பட்ட தூரத்திற்குகூட பயணிகளிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சாதாரண பேருந்துகள்: புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, சாதாரண பேருந்துகளில் ஒரு கிலோ மீட்டருக்கு 58 பைசா மட்டுமே தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்ததால் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், இதையும் தாண்டி 75 பைசா பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.

ஒரு கிலோ மீட்டருக்கு 75 பைசா என்கிற கட்டணம் என்பது விரைவு பேருந்துகளுக்கு மட்டுமே. அதாவது விரைவு பேருந்துகளில் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம். சாதாரண பேருந்துகளில் வசூலிக்கப்படுகிறது. இது தவிர, விரைவுப் பேருந்து என்றால் குறைந்தபட்சம் 120 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும் என்ற விதியும் மீறப்படுகிறது

சிறுவர்கள்: 25 கிலோ மீட்டர் பயணிக்கும் பேருந்துகளுக்கு கூட விரைவுப் பேருந்து என்று போட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தவிர, 5 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு முழுக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இவையெல்லாம் அரசுப் பேருந்துகளில் பயணிப்போரின் தொடர் புகாராக இருக்கிறது. ஊடகங்களிலும் இது குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

நீதிமன்ற உத்தரவினை மீறி, போக்குவரத்து ஆணையரின் அறிவுரையினை மீறி, கூடுதல் கட்டணங்கள் அரசு போக்குவரத்துக் கழகங்களால் வசூலிக்கப்படுவதாகவும், கடந்த ஆண்டு கோயம்புத்தூரில் மட்டும் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 170 பேருந்துகள்மீது வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கண்டிக்கத்தக்கது: அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் அனைவரும் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்தவர்கள் என்ற நிலையில், அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல. அரசின் உத்தரவை அரசே மீறுவது கண்டிக்கத்தக்கது.

முதல்-அமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, அரசுப் பேருந்துகளில், அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும் விரைவுப் பேருந்துகளில் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை சாதாரண பேருந்துகளில் வசூலிப்பதை நிறுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+