ஒரே நேரத்தில் 10,176 பேர் பரதநாட்டியம்.. சென்னை அருகே.. புதிய கின்னஸ் சாதனை
சென்னை: சென்னை அருகே ஒரே இடத்தில் 10,176 பேர் பரதநாட்டியம் ஆடி புதிய கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தினர். முன்னதாக 7190-பேர் ஒரே நேரத்தில் பரத நாட்டியம் நடத்தியதுதான் சாதனையாக இருந்தது.
தமிழக அரசு சுற்றுலாத்துறை சார்பில் சதிர் 10000 என்ற தலைப்பில் 10,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒரே இடத்தில் பரதநாட்டியம் ஆடும் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி தாம்பரம் அடுத்த கௌரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

கின்னஸ் நடுவர் சோப்பியா கலந்து கொண்டு பரதநாட்டிய கின்னஸ் உலக சாதனையை நேரடியாக பார்வையிட்டார்.
இதில் சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை இயக்குநர் அமுதவல்லி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி சிதம்பரத்தில் 7190 பேர் கலந்து கொண்டு ஒரே இடத்தில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடத்தியதே இதுவரை கின்னஸ் உலக சாதனையாக திகழ்ந்து வந்தது.
அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் இன்று தமிழக சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற 10,176 பேர் கலந்து கொண்ட பரதநாட்டியம் ஆடி புதிய கின்னஸ் உலக சாதனை படைத்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது. அதற்கான சான்றிதழை கின்னஸ் நடுவர் சோப்பியா வழங்கினார்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications