தமிழ்நாட்டில் ஆவண எழுத்தர்களுக்கு நலத்திட்ட உதவிகள் எங்கே? ஆண்டுக்கு ரூ.3 கோடி வசூலாகியும் என்னாச்சு
சென்னை: தமிழகத்தில் பதிவு அலுவலகங்களில் ஆவண எழுத்தர்களாக செயல்படுபவர்களின் எண்ணிக்கை குறைவான அளவிலேயே உள்ளதாக கூறப்படுகிறது.. புதிய உரிமம் வழங்குவதற்கான தேர்வு நடத்தப்படும் என்று அரசு தெரிவித்தும் இதுவரை தேர்வு நடத்தப்படாதது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், ஆவண எழுத்தர் நல நிதி குறித்து பகீர் தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. இதுசம்பந்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
நம்முடைய தமிழ்நாட்டில் மொத்தம் 587 இடங்களில், சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சொத்து விற்பனை மட்டுமல்லாது, திருமண பதிவு, சங்கங்கள், நிறுவனங்கள் பதிவு தொடர்பான ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

பத்திரப்பதிவு அலுவலகங்கள்
இதில் கிட்டத்ததட்ட 30 முதல், 35 லட்சம் பத்திரங்கள் பதிவு செய்து கொடுக்கவே, மாநில அளவில் கிட்டத்தட்ட 4,613 பேர் மட்டுமே ஆவண எழுத்தர்களாக செயல்படுகின்றனர்.
எனவே புதிய உரிமம் வழங்குவதற்கான தேர்வு விரைவில் நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில், இதுவரை தேர்வு நடத்தப்படவில்லை... இதன்காரணமாக புதிதாக யாரும் உரிமம் பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆவண எழுத்தர் நல நிதியம்
இதனிடையே, ஆவண எழுத்தர்கள் நலனை பாதுகாக்கும் வகையில், கடந்த 2021ல் ஆவண எழுத்தர் நல நிதியம் ஏற்படுத்தப்பட்டதுடன், இதற்கான நிதி ஆதாரம் கிடைக்க, சார் - பதிவாளர் அலுவலகத்தில் தாக்கலாகும் ஒவ்வொரு பத்திரத்துக்கும், 10 ரூபாய் வீதம் ஆவண எழுத்தர் நல நிதி வசூலிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.
அதன்படி, வருடத்துக்கு 3 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது 10 கோடிக்கு மேல் வசூலாகி உள்ளதாம். அந்த நிதி என்ன ஆனது? ஆவண எழுத்தர்களின் நலனுக்கு பயன்படுத்தப்பட்டதா? அவர்களுக்கான உதவிகள் செய்யப்பட்டதா? என்பது போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன,.
எனவே ரூ.10 கோடிக்கு வசூலாகியிருப்பதாக சொல்லப்படும், இந்த நல நிதியை ஆவண எழுத்தர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது மிகுந்த கவனம் பெற்று வருகிறது.
போலி ஆவண எழுத்தர்கள்
நேற்றுமுன்தினம்தான், பொதுமக்களின் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி வரும் பெயிரா ஆவண எழுத்தர்களின் பற்றாக்குறை குறித்து கேள்விகளை எழுப்பியிருந்தது.. மேலும், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, தமிழக முதலமைச்சருக்கு நேரடியாகவே ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், தமிழகத்தில் ஆவண எழுத்தர்களின் பற்றாக்குறையினை போக்கிடவும், படித்துவிட்டு வேலையில்லா இளைஞர்களுக்கு சுயதொழில் வேலை வாய்ப்பினை உருவாக்கிடும் வகையிலும் ஆவண எழுத்தர்களுக்கான தேர்வினை விரைந்து நடத்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
அரசுக்கு வருவாய் தாமதம்
அத்துடன், ஆவண எழுத்தர்கள் பற்றாக்குறை காரணமாக, போலி ஆவண எழுத்தர்கள் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு ஆவணங்கள் எழுத நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட பொது மக்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாகவும், இதற்கெல்லாம் காரணம் ஆவண எழுத்தர் உரிமம் தேர்வு நடைபெறாததும்தான் என்பதையும் விலாவரியாக அந்த கடிதத்தில் டாக்டர் ஹென்றி சுட்டிக்காட்டியிருந்தார்.
போதிய ஆவண எழுத்தர்கள் இல்லாததால் உரிய நேரத்தில் ஆவண பதிவுகள் மேற்கொள்ள முடியவில்லை என்றும், இதனால் அரசுக்கு வரவேண்டிய வருவாயிலும் காலதாமதம் ஏற்படுவதாகவும் தன்னுடைய கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், பத்திரப்பதிவு செய்பவரிடமிருந்து, வருடத்துக்கு 3 கோடி ரூபாய்க்கு மேல் ஆவண எழுத்தர் நல நிதி வசூலானாலும், அதை பயன்படுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகள் இன்னும் துவங்காமல் இருப்பதாக புகார் தற்போது வெடித்திருக்கிறது.. இதன் உண்மைத்தன்மை என்னவென்று தெரியவில்லை.. எனவே இதுகுறித்து அதிகாரிகள் விரைவில் விளக்கம் தருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..இனி முழு ஊதியத்துடன் 12 வாரம் விடுப்பு! வெளியான முக்கிய அறிவிப்பு! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications