ஆஹா.. தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு.. லிஸ்ட் வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்
Recommended Video
சென்னை: வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் குளுகுளு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழையின்மை காரணமாக கடும் வறட்சி நிலவி வருகிறது. தலைநகர் சென்னையில் கூட, குடிப்பதற்கு குடிநீரின்றி மக்கள் தவித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு என்பது கண்டிப்பாக பொதுமக்களுக்கு மனதில் பால் வார்த்த கூடிய ஒரு செய்தியாகும்.

அந்தத் தகவல் இதுதான்: தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். மற்றொரு பக்கம், வெப்பசலனம் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் மழை பெய்யக்கூடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியானால் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையாலும், கிழக்கு மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பொழிவு பெற உள்ளது.
இருபக்கமும் சூழக்கூடிய மேகங்களால், தமிழகத்திற்கு நல்ல மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே கோவை புறநகர்ப் பகுதியில் இன்று மதியம் முதல் ஆங்காங்கு சாரல் மழை பெய்து வருகிறது. நகரில் இதமான தட்ப வெப்பம் நிலவுகிறது. மேகமூட்டம் காணப்படுவதால், சூரியனின் சுடும் வெப்பத்தில் இருந்து கோவை மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் தப்பித்துள்ளனர்.
-
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications